தெருவோரத்தில் வாழ்ந்த முன்னாள் ராணுவ தளபதி அடித்து கொலை.. புனேவில் பயங்கரம்
புனேவில் தெருவோரத்தில் வாழ்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
புனே: புனேவில் தெருவோரத்தில் வாழ்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. போலீசார் இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
இவரை தாக்கியது யார் என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதேபோல் என்ன காரணம் என்றும் கூறப்படவில்லை.

யார் இவர்
மரணம் அடைந்த ராணுவ வீரர் பெயர் ரவீந்திர பாலி. 67 வயது நிரம்பிய இவர் புனே நகரை சேர்ந்தவர். இவர் இந்திய ராணுவத்தில் 90 களில் ராணுவ தளபதியாக இருந்துள்ளார்.

பிரச்சனை
இவருக்கு சரியாக பென்சன் வழங்கப்படவில்லை. வீட்டில் சண்டையிட்டுவிட்டு புனேவில் தெருவோரத்தில் வசித்து வந்துள்ளார். அங்கு இருக்கும் வீடுகளில் பிச்சை எடுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

மரணம்
இவர் அங்கு இருந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். இதனால் இவர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்து இருக்கிறார். இவரை தாக்கியவர்கள் உடனடியாக அங்கிருந்து மறைந்துள்ளனர்.

சாட்சி
இவர் எதற்காக தாக்கப்பட்டார் என்ற தகவல் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. அங்கு இருந்த வீடு ஒன்றின் வாட்ச்மேன் இதுகுறித்து சாட்சி அளித்துள்ளார். போலீசார் அவர்கள் இரண்டு பேரையும் தீவிரமாக தேடிவருகின்றனர்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications