சீட்டு கிடைக்காததால் விரக்தி! கட்சி மாறும் வடகிழக்கு தலைவர்கள்! பாஜக தலைமை கடும் அதிர்ச்சி
Recommended Video

இடா நகர்: சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கப்படாத விரக்தியில் அருணாசலப்பிரதேசத்தைச் சேர்ந்த 2 அமைச்சர்கள், 6 எல்எல்ஏக்கள் உள்பட 25 பேர் என்பிபி கட்சியில் இணைந்தனர்.
2014ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையில் பாஜக மத்தியில் ஆட்சியை பிடித்த பின்னர் வடகிழக்கு மாநிலங்களை ஒவ்வொன்றாக பாஜக கைப்பற்றியது. அஸ்ஸாம், திரிபுரா, அருணாசல பிரதேசம் என பல வடகிழக்கு மாநிலங்களை வாரி சுருட்டியது.
இந்நிலையில் தற்போது அருணாசல பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்காத விரக்தியால் பாஜக தலைவர்கள் பலர் மேகாலயா மாநில முதல்வர் சங்மாவின் என்பிபி கட்சியில் இணைந்துள்ளனர்.

தேர்தல் அறிவிப்பு
அருணாசல பிரதேசத்தில் வரும் ஏப்ரல் 11ம் தேதி சட்டமன்ற தேர்தலும், நாடாளுமன்ற தேர்தலும் ஒன்றாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அருணாசல பிரதேசத்தில் மொத்தம் 60 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

வேட்பாளர் பட்டியல்
இதையடுத்து பாஜக நாடாளுமன்ற குழு தலைமை கடந்த ஞாயிற்றுக்கிழமை மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 54 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலை பார்த்து பாஜக நிர்வாகிகள் பலர் அதிர்ச்சி அடைந்தனர்.

தலைவர்கள் அதிருப்தி
அருணாசல பிரதேசத்தின் பாஜக மாநில செயலாளர் ஜர்பூம் கம்லின், அம்மாநில உள்துறை அமைச்சர் குமார் வெய், மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜார்கர் கம்லின் ஆகியோருக்கு சீட் கிடைக்கவில்லை. இதேபோல் சில எம்எல்ஏக்களுக்கும் சீட் கிடைக்கவில்லை.

கட்சி மாறிய நிர்வாகிகள்
இதையடுத்து சீட் கிடைக்காத 2 பாஜக அமைச்சர்கள் உள்பட 8 எம்எல்ஏக்கள் மற்றும் 19 தலைவர்கள் மேகலாயா முதல்வர் சங்கமாவின் என்பிபி கட்சியில் இணைந்தனர். இதேபோல் அருணாசல மக்கள் கட்சி தலைவர்களும் என்பிபி கட்சியில் இணைந்தனர். இதனால் பாஜக தலைமை அதிர்ச்சியில் உள்ளது.

என்பிபி வேட்பாளர்கள்
இதனிடையே என்பிபி கட்சியின் பொதுச்செயலாளர் தாமஸ் சங்மா செய்தியாளர்களிடம் கூறும் போது, "அருணாசல பிரதேச சட்டமன்ற தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிட உள்ளது. வரும் புதன்கிழமை வேட்பாளர் பட்டியலை அறிவிக்க உள்ளோம்" என்றார். இதனிடையே என்பிபி செய்தி தொடர்பாளர் முட்சு மிதி கூறுகையில், தேவைப்பட்டால் எங்கள் கட்சி அருணாச்சல பிரதேசத்தில் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்றார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications