பெங்களூர் புறநகரில் 2 சிறுத்தைகள் ஊடுருவியதாக வதந்தி- வீட்டுக்குள் முடங்கிய மக்கள், பள்ளிகள் மூடல்!
பெங்களூர்: சிறுத்தைகள் புகுந்துள்ளதாக வெளியாகியான தகவலை தொடர்ந்து பெங்களூரின் புறநகர் பகுதியான ஒயிட்பீல்டு பகுதியில் மக்கள் பெரும் பீதிக்குள்ளாகினர். வீடுகளுக்குள்ளேயே அடைந்து கிடக்குமாறு மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கைவிடுத்தது. அப்பகுதியிலுள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால், அது வதந்தி என பின்னர் தெரிய வந்தது.
பெங்களூரின் தென்கிழக்கு புறநகர் பகுதி ஒயிட்பீல்டு. பல ஐடி நிறுவனங்களும், பணக்காரர்கள் வசிக்கும் அப்பார்ட்மென்டுகளும் நிறைந்த பகுதி இது.
கோலார் மாவட்டத்தில் இருந்து பெங்களூருக்குள் வரும்போது நுழைவு வாயில் பகுதியாக இருப்பது ஒயிட்பீல்டு. சென்னை-பெங்களூர் ரயில்களும் இந்த பகுதியை தாண்டிதான் பயணிக்கின்றன.

பள்ளிக்கு வந்த சிறுத்தை
ஒயிட்பீல்டு அருகேயுள்ள வர்த்தூர் என்ற பகுதியிலுள்ளது விப்ஜியார் ஆங்கில வழி பள்ளி. இந்த பள்ளி வளாகத்திற்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுத்தை ஒன்று நுழைந்தது. தகவல் அறிந்து அதை பிடிக்க சென்ற வனத்துறை ஊழியர்களையும், படம் பிடிக்க சென்ற பத்திரிகை கேமரா மேன்களையும் கடித்து குதறியது அந்த சிறுத்தை.

பிடிபட்டது
சிறுத்தை தாக்குதலில் சிலர் காயமடைந்தாலும், உயிருக்கு ஆபத்தின்றி அனைவரும் தப்பினர். ஒருவழியாக காலை முதல் மாலை வரை போராடி அந்த சிறுத்தையை பிடித்து, பெங்களூரின் புறநகரான பன்னேருகட்டாவிலுள்ள உயிரியல் பூங்காவில் சென்றுவிட்டனர், வனத்துறையினர்.

இரவில் 2 சிறுத்தைகள்?
இந்த பரபரப்பு ஓய்ந்து, நேற்றும், நேற்று முன்தினமும் அந்த பள்ளி வழக்கம்போல திறக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று இரவு, பள்ளி அருகே இரு சிறுத்தைகள் உலவியதாக அப்பகுதி மக்கள் சிலர், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தேடுதல் வேட்டை
வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தபோதிலும், இரவில் சிறுத்தைகளை தேடுவது இயலாது என்பதால், இன்று அதிகாலை முதல் தேடுதல் வேட்டை நடத்தினர். மாலை வரை நடந்த தேடுதல் வேட்டையின் முடிவில், சிறுத்தை எதுவும் வரவில்லை என்பது தெரியவந்தது. இரவில் உலவிய தெரு நாயை பார்த்து யாராவது சிறுத்தை என பீதி கிளப்பியிருக்கலாம் என தெரிகிறது.

மக்கள் முடங்கினர்
சிறுத்தைகள் ஊடுருவியதாக கிளம்பிய பீதியால், விப்ஜியார் உட்பட அப்பகுதியிலுள்ள பல, பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. ஒயிட்பீல்டு மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் கதவு, ஜன்னல்களை பூட்டி வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு, வனத்துறையினரால் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். வனத்துறை தலைமை வார்டன் ரவி இன்று மாலை அளித்த பேட்டியில், சிறுத்தை எதுவும் புதிதாக வரவில்லை. மக்கள் பீதியடைய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

புதிது கிடையாது
பெங்களூர் அருகேயுள்ள காடுகளில் இருந்து சிறுத்தைகள் ஊடுருவது இது புதிது கிடையாது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், 17ம் தேதி, பெங்களூர் அடுத்த கனகபுரா சாலை பகுதியில் அடையாளம் தெரியாத வாகனத்தில் அடிபட்டு சிறுத்தை ஒன்று செத்துப்போனது.

நாய்களை கொன்றது
2014ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி, மாகடி ரோடு பகுதியில் தாசனஹள்ளி என்ற இடத்தில், 4 மாதங்களாக நாய்களை கொன்று, அச்சுறுத்தி வந்த ஒரு சிறுத்தையை வனத்துறையினர் பிடித்தனர். 2014 ஜூன் மாதம், கனகபுரா சாலையில் உள்ள அப்பார்ட்மென்ட் வளாகத்தில் சிறுத்தை பிடிபட்டது.

எலக்ட்ரானிக் சிட்டியிலும்
2014 பிப்ரவரி மாதத்தில், புறநகர் பகுதியான தாவரெகேயில், ஒரு சிறுத்தை பிடிபட்டது. அதே ஆண்டு மே மாதம், எலக்ட்ரானிக் சிட்டி அருகே, நைஸ் ரோடு சந்திப்பில் ஒரு சிறுத்தை கண்ணில் பட்டது. ஆனால் தப்பிவிட்டது. அடுத்தடுத்த சிறுத்தை ஊடுருவல்களால், பெங்களூர் மக்கள் மத்தியில் பெரும் பீதி நிலவுகிறது.

வந்தது எப்படி
இதனிடையே சிறுத்தை எப்படி ஒயிட்பீல்டு பகுதிக்குள் வந்தது என்பது மர்மமாக உள்ளது. கனகபுரா சாலை, ராம்நகர் மாவட்ட காடுகளில் சிறுத்தை, கரடிகள் உண்டு. ஆனால், கோலார் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள இப்பகுதியில் சிறுத்தை வனத்திற்குள் இருந்து வந்திருக்க வாய்ப்பில்லை என தெரிகிறது. கடத்திச் செல்லப்பட்ட சிறுத்தைகள் ஏதேனும் வாகனங்களில் இருந்து தப்பியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
-
இந்திய டெக் ஊழியர்களை கதறவிட்ட Meta.. 3 பிரிவில் கண்ணை மூடிக்கொண்டு பணிநீக்கம்.. எங்குபோய் முடியுமோ -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications