For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய விமானப்படை தாக்குதலில்... 2 பாக். ராணுவத்தினர் பலி.. தீவிரவாதிகள் கூண்டோடு காலி!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய விமானப்படையும், ராணுவமும் இணைந்து நேற்று இரவு பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடத்திய அதிரடித் தாக்குதலில் பல தீவிரவாதிகள் கூண்டோடு கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதில் 2 பாகிஸ்தான் ராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அருகே உள்ள தீவிரவாதி முகாம்களைக் குறி வைத்து விமானப்படையும், ராணுவமும் அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டன. இதில் பாகிஸ்தானிலிருந்து கொண்டு இயங்கி வந்த தீவிரவாதிகள் கூண்டோடு கொல்லப்பட்டனர். தீவிரவாத முகாம்களும் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன.

2 Pak soliders killed in Indian attack

பாகிஸ்தான் பகுதிக்குள் நடந்துள்ள இந்தத் தாக்குதலால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது. அதேசமயம் கொல்லப்பட்ட அத்தனை பேரும் தீவிரவாதிகள் என்பதால் அதற்கு என்ன செய்வது என்றும் தெரியவில்லை. இந்த அதிரிடி் தாக்குதலில் 2 பாகிஸ்தான் ராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர்.

2003ம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு பல முறை பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்தத்தை மீறி நடந்து வந்தது. தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு வந்தது. ஆனால் இந்திய ராணுவம் பொறுமை காத்து வந்தது. ஆனால் பதன் கோட் விமான தளத்திலும், பின்னர் சமீபத்தில் யூரி ராணுவ நிலையிலும் தீவிரவாதிகள் நடத்திய பெரும் தாக்குதல் இந்தியாவை கொந்தளிக்க வைத்து விட்டது.

இதையடுத்து பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இந்த நிலையில்தான் நேற்று இரவு அதிரடியாக பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களைக் குறி வைத்து இந்திய விமானப்படையும், ராணுவமும் இணைந்து தாக்கின. இதில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டு விட்டனர். பாகிஸ்தான் ராணுவத்த தரப்பில் இருவர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

20க்கும் மேற்பட்ட ஊடுறுவல்களும் முறியடிப்பு

இதேபோல எல்லைப் பகுதியில் 20க்கும் மேற்பட்ட தீவிரவாத ஊடுறுவல் முயற்சிகளையும் முறியடித்துள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

English summary
2 Pak soliders were killed in Indian attack say the defence sources in Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X