ஆட்டோ மீது மின்னல் வேகத்தில் மோதிய ரயில் - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் பலி!
பாட்னா: பீகார் மாநிலம் மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் ஆட்டோ மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதில் 8 பேர் குழந்தைகள் ஆவர்.
நேற்று, செம்ரா ரயில் நிலையம் அருகே ஒரு ரயில்வே கிராசிங்கில் ஒரு ஆட்டோ கடக்க முயன்றுள்ளது. அப்போது அந்த வழியாக ரப்தி கங்கா எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்தது.
தண்டவாளத்தின் குறுக்கே ஆட்டோ வருவதைப் பார்த்த ரயில் டிரைவர் அதிர்ச்சி அடைந்தார். ஆனால் ரயில் வேகமாக நெருங்கி விட்டதால் நிறுத்தவும் முடியவில்லை. இந்த நிலையில் ஆட்டோ மீது ரயில் மோதி தூக்கி வீசியது.
இந்த கோர விபத்தில் 20 பேர் கொல்லப்பட்டனர். சம்பந்தப்பட்ட ரயில் முசாபர்பூரிலிருந்து டேராடூன் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ஆட்டோவில் பயணித்த அனைவருமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 29 பேர் பலியாகி வி்ட்டனர். 3 பேர் படுகாயங்களுடன் தப்பினர். அனைவரும் ஒரு நிகழ்ச்சிக்காக போய்க் கொண்டிருந்தபோது விபரீதம் ஏற்பட்டு விட்டது.












Click it and Unblock the Notifications