பஞ்சாபில் பள்ளத்தில் மினி டிரக் கவிழ்ந்து விபத்து: 20 பேர் பலி, 40 பேர் காயம்
ஹோசியார்பூர்: பஞ்சாப் மாநிலத்தில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியாகினர்.
மினி டிரக் ஒன்றில் யாத்ரீகர்கள் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சின்த்புரி கோவிலுக்கு புனித யாத்திரை சென்றனர். அவர்கள் அங்கிருந்து பஞ்சாப் மாநிலம் கபுர்தலா மாவட்டத்தில் உள்ள பெகோவலுக்கு சென்று கொண்டிருந்தனர்.
அந்த டிரக் பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூர் அருகே உள்ள மங்குவால் கிரமாத்தில் இன்று காலை சென்று கொண்டிருக்கையில் பிரேக் வேலை செய்யவில்லை. இதையடுத்து வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்தது.
இதில் டிரக்கில் இருந்த யாத்ரீகர்களில் 13 பெண்கள், 4 குழந்தைகள் உள்பட 20 பேர் பலியாகினர். மேலும் 40 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மினி டிரக்கில் அளவுக்கு அதிகமாக ஆட்கள் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர்.
உலகிலேயே இந்தியாவில் தான் மிகவும் மோசமான சாலைகள் உள்ளன. இதனால் ஆண்டுதோறும் 110,000 பேர் சாலை விபத்துகளில் பலியாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications