For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிறிய இடம்தான் கொடுக்கிறார்கள்.. மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் செய்ய முடியவில்லை.. புலம்பிய மோடி!

மேற்கு வங்கத்தில் பாஜக பொதுக்கூட்டம் நடத்த சிறிய இடம் மட்டுமே அளிக்கப்படுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜக பொதுக்கூட்டம் நடத்த சிறிய இடம் மட்டுமே அளிக்கப்படுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பாஜக கட்சி தேர்தலில் பிரச்சாரத்தில் மிக தீவிரமாக ஈடுப்பட்டு இருக்கிறது. பிரதமர் மோடி கடந்த ஒருவாரமாக தீவிரமாக நாடு முழுக்க பிரச்சாரம் செய்து வருகிறார்.

இன்று அவர் மேற்கு வங்கத்தில் கூச் பெஹார் பகுதியில் பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரத்தில் அவர் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை கடுமையாக தாக்கி பேசினார்.

திரும்ப திரும்ப பேசுற நீ.. டிவி விவாதத்தில் நடந்த சண்டை.. தண்ணீர் கிளாஸை வீசி தாக்குதல்.. வீடியோ! திரும்ப திரும்ப பேசுற நீ.. டிவி விவாதத்தில் நடந்த சண்டை.. தண்ணீர் கிளாஸை வீசி தாக்குதல்.. வீடியோ!

என்ன பேசினார்

என்ன பேசினார்

பிரதமர் மோடி தனது பேச்சில், பாஜக பொதுக்கூட்டம் நடத்த சிறிய இடம் மட்டுமே அளிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் பாஜக நடத்தும் கூட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இப்போது இருக்கும் இடத்தில் குறைவான மக்களே நிற்க முடிகிறது. பெரிய இடம் கொடுத்து இருந்தால் நிறைய பேர் இருந்திருப்பார்கள்.

மமதா பானர்ஜி

மமதா பானர்ஜி

மமதா பானர்ஜி வளர்ச்சி திட்டங்களை தடுக்கும் ஒரு ஸ்பீட் பிரேக்கர் போல தொடர்ந்து செயல்படுகிறார். அவருக்கு நான் அந்த பெயரைத்தான் வைத்து இருக்கிறேன். இந்த மக்களை இனியும் அவர் ஏமாற்ற முடியாது. மமதா பானர்ஜியை ஆட்சியில் இருந்து அகற்ற இந்த மக்கள் உறுதியேற்றுவிட்டார்கள்.

மமதா பானர்ஜி எப்படி

மமதா பானர்ஜி எப்படி

நாங்கள் யாராலும் நினைக்க முடியாத விஷயங்களை செய்து இருக்கிறோம். பாஜக செய்த பல விஷயங்கள் பலரால் கொஞ்சம் கூட நினைக்க முடியாதது. பாகிஸ்தானுக்கு நமது அரசு திருப்பி பதிலடி கொடுக்கும் என்று யாரும் நினைத்து இருக்க மாட்டார்கள். ஆனால் நாங்கள் அதை நிகழ்த்திக் காட்டினோம்.

மீண்டும் பாகிஸ்தான்

மீண்டும் பாகிஸ்தான்

பாகிஸ்தானை வலுப்படுத்தியது காங்கிரஸ்தான். அவர்கள் ஆட்சியில்தான் பாகிஸ்தான் வலுவான நாடாக மாறியது. இதோ இப்போது காஷ்மீருக்கு தனி பிரதமர் வேண்டும் என்று கேட்கிறார்கள். இந்த கோரிக்கைக்கு மமதா பானர்ஜியும் ஆதரவு அளிக்கிறார் என்பது வருத்தமாக இருக்கிறது. என்று மோடி குறிப்பிட்டு இருக்கிறார்.

English summary
2019 Lok Sabha election: WB CM Mamata is not allowing major political campaigns for BJP says, PM Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X