நவாஸ் ஷெரீப்பின் இந்திய பயணம்... தீவிரவாத இயக்கங்கள் கடும் எச்சரிக்கை!
டெல்லி: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்திய பயணம் மேற்கொள்வதற்கு ஜாமாத் உத் தவா, லஷ்கர் இ தொய்பா ஆகிய தீவிரவாத அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளன.
டெல்லியில் 26-ந் தேதி நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் நவாஸ் ஷெரீப் கலந்து கொள்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது.

இந்நிலையில் பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியான வீடியோவில் பேசியுள்ள ஜமா உத் தவாவின் தலைவரும் மும்பை தாக்குதல் குற்றவாளியுமான ஹபீஸ் சயீத், மோடியின் பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் நீங்கள் பங்கேற்றால், நீங்கள் எப்படி காஷ்மீரி மக்களுக்கு உங்கள் பதிலை அளிப்பீர்கள்? காஷ்மீரி மக்கள் ஷரீப்பின் இந்திய பயணத்தால் அதிருப்தி அடைந்துள்ளனர் என்றார்.
இதேபோல் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவரும் இந்தியாவுடன் நல்லுறவு பாராட்டுவதற்கு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.. காஷ்மீர் விவகாரம் தீர்க்கப்படாமல், அவர்களுடன் வர்த்தக உறவோ, நட்புறவோ எந்த ஒப்பந்தமோ போடக்கூடாது என்றும் கூறியுள்ளார்..
ஏற்கெனவே பாகிஸ்தான் ராணுவம், நவாஸ் ஷெரீப்பின் இந்திய பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தீவிரவாத இயக்கங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது அந்நாட்டில் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications