மகாராஷ்டிராவில் சோகம்! விபத்தில் பேருந்து தீ பற்றி எரிந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்வு
மும்பை: மகாராஷ்டிராவில் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரிலிருந்து புனேவுக்கு 33 பயணிகளுடன் பேருந்து ஒன்று புறப்பட்டது. இது நள்ளிரவில் புல்தானாவில் வந்துக்கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் உரசி, தடுப்புகளில் மோதி கவிழ்ந்து விபத்தில் சிக்கியுள்ளது. விபத்தில் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கிவிட்டது.

இதனால் உள்ளே இருந்த பயணிகள் உடடியாக வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டது. புல்தானா மாவட்டத்தில் உள்ள சிந்த்கேதராஜா அருகே உள்ள பிம்பால்குடா கிராமத்திற்கு அருகில் உள்ள சம்ரிதி நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் பேருந்தின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து 8 பேரை காப்பாற்றியுள்ளனர்.
விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், "பஸ் வலதுபுறத்தில் இருந்த மின் கம்பத்தில் முதலில் மோதியது. இதனால் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்தார். பின்னர் டிவைடரில் மோதி பஸ் இடதுபுறமாக கவிழ்ந்துவிட்டது. அதாவது கதவு உள்ள பகுதி ரோட்டில் சாய்ந்துவிட்டது. இதனால் மக்கள் உடனடியாக அதிலிருந்து வெளியே வர முடியாமல் தவித்தனர்.
மட்டுமல்லாது ரோடு முழுவதும் டீசல் பரவியதால் உடனடியாக பஸ் தீப்பற்றிக்கொண்டது. எனவே எங்களாலும் மீட்பு பணியில் முழுமையாக ஈடுபட முடியவில்லை" என்று கூறியுள்ளனர். சில மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பஸ்ஸில் பற்றிய தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்து குறித்து புல்தானா எஸ்பி சுனில் கடசேனே கூறுகையில், "இந்த விபத்து நள்ளிரவு 1.30 மணிக்கு நடந்திருக்கிறது. முதற்கட்ட விசாரணையில் டயர் வெடித்ததால்தான் பஸ் கட்டுப்பாட்டை இழந்ததுள்ளது தெரிய வந்துள்ளது. பின்னர் டிவைடரில் மோதியதால் சாலையில் கவிழ்ந்துள்ளது. இதில் டீசல் டேங்கிலிருந்து டீசல் வெளியேறியதுதான் இந்த தீ விபத்துக்கு காரணம். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 3 பேர் குழந்தைகள்" என்று கூறியுள்ளார்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் கருகியுள்ளதால் அதை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. விபத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட் டிரைவர் உட்பட 8 பேர் புல்தானா சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து மகாராஷ்டிரா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications