26 கோடி பேருக்கு ஜன்தன் வங்கி கணக்குகள் தொடக்கம்... பிரணாப் பெருமிதம்
நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஏழைகளுக்காகவே மத்திய அரசு செயல்படுவதாக கூறினார். 26 கோடி பேருக்கு ஜன்தன் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார
டெல்லி: மத்திய அரசின் ஜன்தன் வங்கிக்கணக்குகள் 26 கோடி பேருக்கு தொடங்கப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். ஏழைகள் நலிந்தவர்கள், தலித் மக்களின் நலனை முன்வைத்தை அரசின் கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றினார். இதில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராஜ்ய சபா மற்றும் லோக் சபா உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய அவர் ஏழைகளின் நலனுக்காகவே அரசு யெல்படுவதாக கூறினார். மத்திய அரசின் ஜன்தன் வங்கி கணக்கு 26 கோடி பேருக்கு தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். மேலும் அவர் பேசியதாவது,
வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட்
முதல்முறையாக ரயில்வே பட்ஜெட் பொது பட்ஜெட்டுடன் சேர்த்து தாக்கல் செய்யப்படவுள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்கது. மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
முத்ரா திட்டத்தில் ரூ.2 லட்சம் கோடி கடன்
ஏழைகள், நலிந்தவர்கள், தலித் மக்களின் நலனை முன்வைத்தை அரசின் கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. சிறு தொழிலுக்கான முத்ரா திட்டத்தில் பொதுமக்களுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.
13 கோடி பேர் பயனடைந்துள்ளனர்
அரசின் சமூக நலத்திட்டங்கள் மூலம் 13 கோடி பேர் பயனடைந்துள்ளனர்.
ஏழைகளின் வாழ்க்கை தரம் உயர அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தபால் வங்கிச்சேவை
வங்கிச்சேவை வீட்டு வாசலுக்கே வரும் வகையில் தபால் வங்கிச் சேவை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் வங்கிப்பணிகளை மேற்கொள்கின்றன.
இலவச எரிவாயு இணைப்புகள்
கடந்த ஓராண்டில் 5 கோடி மக்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகள் தரப்பட்டுள்ளது. 2 கோடி மக்கள் சமையல் எரிவாயு மானியத்தை தாமாக முன்வந்து திருப்பி கொடுத்துள்ளனர்.
பொது இடம்- கழிப்பிடம் தடுப்பு
அனைவருக்கும் வீடு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட திட்டங்களில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. நாட்டில் 1.4 லட்சம் கிராமங்கள் பொது இடத்தை கழிப்பிடமாக பயன்படுத்துவது தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது உரையில் தெரிவித்தார்.
வீராங்கனைகளுக்கு பாராட்டு
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற விளையாட்டு வீராங்கனைகள் பி.வி.சிந்து, சாக்ஷி மாலிக், தீபா கர்மாகர் ஆகியோருக்கு பாராட்டு பிரணாப் முகர்ஜி பாராட்டு தெரிவித்தார். இந்திய பெண்களின் வலிமையை உலகுக்கு பறைசாற்றியுள்ளதாக வீராங்கனைகளுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரணாப்பின் கடைசி உரை
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் கடைசி பட்ஜெட் கூட்டத்தொடர் இதுவாகும். அவருடைய பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications