தடுப்பூசி எடுத்துக்கொண்ட... 11 சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா... மூடப்பட்ட மருத்துவமனை
அகர்தலா: திரிபுரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட 11 சுகாதார ஊழியர்கள் உட்பட 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுரா மாநிலத்திலுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தற்போது கொரோனா ஹாட்ஸ்பாட்டாக உருவெடுத்துள்ளது. அம்மாநிலத்திலுள்ள மேற்கு திரிபுரா மாவட்டத்தில் இருக்கும் திரிபுரா மருத்துவமனை கல்லூரி மருத்துவமனையில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 11 பேர் ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே இடத்தில் பணிபுரியும் 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் மருத்துவமனையின் வெளி நோயாளிகள் பிரிவை 72 மணி நேரத்திற்கு மூட மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்த தகவலைச் சேகரிக்க தொடங்கியுள்ளதாகவும் அம்மாநிலத்தின் சுகாதார துறை தெரிவித்துள்ளது. 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மருத்துவமனையில் பணிபுரியும் அனைவருக்கும் தற்போது கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி பணிகளை மிகவும் சிறப்பாக மேற்கொண்டு வந்த மாநிலங்களில் ஒன்றாக திரிபுரா உள்ளது. ஏற்கனவே, மாநிலத்திலுள்ள 84% சுகாதார ஊழியர்களுக்கும் 70% முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அதேபோல கடந்த ஜனவரி மாதம் திரிபுராவில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. பிப்ரவரி முதல் வாரத்தில் கூட ஒற்றை இலக்கிலேயே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்து. இந்தச் சூழ்நிலையில், ஒரே மருத்துவமனையில் பணிபுரும் 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications