மன அழுத்தம், ஜீவனாம்சம், மருத்துவ செலவு.. 43வது மாடியில் இருந்து குதித்த 28 வயது இன்ஜினியர் மரணம்

Subscribe to Oneindia Tamil

நொய்டா: 43வது மாடியில் இருந்து குதித்து 28 வயதான சாப்ட்வேர் இஞ்சினியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன அழுத்தம், குடும்ப பிரச்சனை, குழந்தையின் மருத்துவ செலவு மற்றும் கடன் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உலகில் எந்தவொரு பிரச்சினை ஏற்பட்டாலும் அதை நாம் சமாளித்துவிடலாம்.. டைம் இருந்தால் தீர்த்துவிடலாம். ஆனால், அதை புரிந்து கொள்ளாமல் சில நேரங்களில் சிலர் மோசமான முடிவுகளை எடுத்துவிடுகிறார்கள். அப்படியொரு மோசமான சம்பவம் தான் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்துள்ளது.

Alimony india

உயிரிழப்பு

அங்குள்ள கட்டிடத்தின் 43வது மாடியில் இருந்து குதித்து 28 வயதான சாப்ட்வேர் இஞ்சினியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். உயிரிழந்தவர் குருகிராமின் மானேசரில் வசித்து வந்த சம்பவ் ஜெயின் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அந்த கட்டிடத்தில் இருந்த ரூமில் தங்க புக் செய்திருந்த அவர், தனியாகவே ரூமிற்கு வந்துள்ளார். அப்போது தான் இந்த மோசமான முடிவை அவர் எடுத்திருக்கிறார்.

குழந்தை மருத்துவ செலவு

சம்பவ் ஜெயின் 2024ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டதாகவும், 2025ஆம் ஆண்டு அவருக்கு ஆண் குழந்தை பிறந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது மனைவி கர்ப்பமாக இருந்தபோது 7வது மாதத்திலேயே குழந்தை பிறந்ததால், நீண்ட கால மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதாக அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் கூறியுள்ளனர். குழந்தையின் சிகிச்சைக்காக இதுவரை சுமார் ரூ.40 லட்சம் செலவிடப்பட்டதாகவும், தொடர்ந்து லட்சக்கணக்கில் மருத்துவ செலவுகள் ஏற்பட்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக சம்பவ் கடுமையான நிதிச்சுமையை எதிர்கொண்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், குழந்தை பிறந்த சில மாதங்களுக்குப் பிறகு, சம்பவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அவரது மனைவி விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். பின்னர் இரு தரப்பினரும் சமரசத்திற்கு வந்தனர். ஆரம்பத்தில் ஜீவனாம்சமாக ரூ.1 கோடி கேட்டதாக கூறப்பட்ட நிலையில், இறுதியில் சுமார் ரூ.15 லட்சத்தில் சமரசம் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

விவகாரத்து

இதில் சுமார் ரூ.7 லட்சம் ஏற்கனவே சம்பவ் மற்றும் அவரது குடும்பத்தினர் சார்பில் வழங்கப்பட்டிருந்ததாகவும், மேலும் ரூ.7.50 லட்சம் நிலுவையில் இருந்ததாகவும் போலீசாரிடம் குடும்பத்தினர் கூறியுள்ளனர். இது தவிர சம்பவ்க்கு வேறு சில கடன்களும் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பவ்கிற்கு எடை தொடர்பாகவும் சில உடல்நிலை பாதிப்புகள் இருந்துள்ளன.

இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகள் இருந்ததால் சம்பவ் கடுமையான மன அழுத்தத்தில் இருந்துள்ளார். கடந்த வாரம் தான் அவர் தந்தைக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். மகனை வீட்டுக்கு வருமாறு அவரது தந்தை கேட்டுக்கொண்டதுடன், பிரச்சனையை குடும்பத்தினர் பார்த்து கொள்வார்கள் என்றும் உறுதியளித்துள்ளார். இருப்பினும், தந்தை சொன்னதை சம்பவ் கேட்காமல் மோசமான முடிவை எடுத்திருக்கிறார்.

என்ன நடந்தது

கடந்த சனிக்கிழமை பிற்பகலில் இந்த உயரமான கட்டிடத்தில் உள்ள பால்கனியின் வெளிப்புற விளிம்பில் சம்பவ் நின்றிருந்ததாக கூறப்படுகிறது. அருகிலுள்ள குடியிருப்பில் பணியாற்றிக் கொண்டிருந்த ஏசி பழுதுபார்க்கும் ஊழியர்கள் இதை கவனித்து அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை. சம்பவ் 43வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.

இது தொடர்பான தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். கட்டிடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதிவான சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

மன அழுத்தம், குடும்பப் பிரச்சனை, குழந்தையின் சிகிச்சை செலவு, விவாகரத்து மற்றும் கடன் என பல்வேறு விஷயங்கள் சேர்ந்தே சம்பவ்வை இந்த மோசமான முடிவை எடுக்க வைத்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+