நாளை விண்ணில் சீறிப் பாய்கிறது ஜிஎஸ்எல்வி-டி6 ராக்கெட்.. 29 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை தொடக்கம்
ஸ்ரீஹகோட்டா : முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாராகியுள்ள ஜிஎஸ்எல்வி-டி6 ராக்கெட் மூலம் ஜிசாட்-6 செயற்கைக்கோள் நாளை மாலை 4.52 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான இறுதிகட்ட பணிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதற்கான 29 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 11.52 மணிக்கு தொடங்குகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்டுகள் மூலமாக செயற்கைகோள்களை விண்ணில் ஏவி வருகிறது. அந்த வகையில், தற்போது ஜிசாட்-6 என்ற தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டுக்கான செயற்கைக் கோளை ஜிஎஸ்எல்வி-டி6 ராக்கெட் மூலம் நாளை (புதன்கிழமை) விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு திட்டமிட்டுள்ளது. ஜிஎஸ்எல்வி வரிசையில் இது 9-வது ராக்கெட். அதேபோல ஜிசாட் வரிசையில் இது 25-வது செயற்கைக்கோள் ஆகும்.
ஜிஎஸ்எல்வி-டி6 ராக்கெட், முற்றிலும் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் க்ரையோஜெனிக் இன்ஜின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2 முறை கிரையோஜெனிக் இன்ஜின் மூலம் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை இஸ்ரோ விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியிருக்கிறது.
தற்போது, தகவல் தொழில் நுட்ப பயன்பாட்டுக்காக செலுத்தப்பட உள்ள ஜிசாட்-6 செயற்கைக் கோள் ரூ.250 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மொத்த எடை 2,500 கிலோவாகும். இதில் எஸ்-பேண்ட் தொழில்நுட்ப முறை இடம்பெற்றுள்ளது. செயற்கைக் கோளில் மிகப்பெரிய 'ஆண்டனா' பொருத்தப்பட்டுள்ளதால், மிகச் சிறிய தொலை பேசி மூலமாகவும் நேரடியாக செயற்கைக்கோளை, எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் தொடர்பு கொள்ள முடியும்.
இந்த ஆண்டனாவுக்கு அதிகளவிலான சிக்னலை ஈர்க்கும் ஆற்றல் உண்டு. எனவே, தகவல் தொடர்புத் துறைக்கு அதிலும் குறிப்பாக, பாதுகாப்புத்துறைக்கு இந்த செயற் கைக்கோள் பேருதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications