2ஜி வழக்கு குற்றவாளிகளுடன் சந்திப்பா? உச்சநீதிமன்றத்தில் சிபிஐ இயக்குநர் பிரமாண பத்திரம் தாக்கல்!
டெல்லி: 2ஜி ஊழல் வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகளை சந்தித்து பேசியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து, உச்சநீதிமன்றத்தில் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்கா பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் சிலர், சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்காவை அவரது அரசு இல்லத்தில் வைத்து சந்தித்து பேசியதாக வழக்கறிஞரும், ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவருமான பிரசாந்த் பூசன் குற்றம் சாட்டி, இதுகுறித்த பிரமாணப் பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அதில், ரஞ்சித் சின்கா வீட்டு வருகை பதிவேட்டில் 2ஜி ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் கையெழுத்திட்டிருந்ததை முக்கிய ஆதாரமாக காண்பித்திருந்தார். இதையடுத்து, பதிலுக்கு ரஞ்சித் சின்காவும் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டிருந்தது. இதுகுறித்து நோட்டீஸ் அனுப்பப்பப்பட்டது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் இன்று ரஞ்சித் சின்கா பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்தார். சீலிடப்பட்ட கவரில் வைத்து பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. ரகசியம் காப்பதற்காக இவ்வாறு செய்யப்பட்டது.
"வீட்டின் வருகை பதிவேட்டு நகலை பிரசாந்த் பூசன் பெற்ற விதம் கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியது என்றும், சிபிஐ அமைப்பின் மரியாதையை கெடுக்க சதி நடந்துள்ளதாகவும்" ரஞ்சித் சின்கா ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications