ஆடைகளை உருவி.. "அந்த" கோலத்தில்.. தெருவில் இழுத்து சென்ற குரூரர்கள்.. விம்மிதுடித்த இளம்பெண்.. அய்யோ
இளம்பெண்ணை அரை நிர்வாண கோலத்தில் தெருவில் இழுத்து சென்றுள்ளனர் 3 பேர்
போபால்: இளம்பெண் ஒருவரை அரைநிர்வாணமாக்கி தெருத்தெருவாக இழுத்து சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. அதிலும் உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் மாநிலங்களில் முதன்மையான இடத்தை பிடித்து வருகின்றன.
இந்த மாநிலங்களில் இன்னும் என்னென்ன அட்டூழியங்கள் நடக்குமோ தெரியவில்லை.. தினம் தினம் கொடூரங்கள்.. கொடுமைகள்.. தினுசு தினுசாக சேட்டைகள் என பெருகி பெருகி வருகிறது.

அரைநிர்வாணம்
அதிலும் பெண்களை அரை நிர்வாணப்படுத்துவதும், அவரை பொதுவெளியில் வைத்து கேவலப்படுத்துவதும் என இழிசெயல்கள் எல்லைமீறி கொண்டிருக்கின்றன.. இப்படித்தான் இதே உத்தரபிரதேசத்தின் மொராதாபாத்மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்தது.. போஜ்பூரைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. கடந்த செப்டம்பர் 1ம் தேதி பக்கத்து கிராமத்தில் உள்ள ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த 4 இளைஞர்கள் சிறுமியை மிரட்டி வாகனத்தில் தூக்கி சென்றனர்.. அவரது ஆடையை களைந்து பாலியல் பலாத்காரமும் செய்துள்ளனர்.

நிர்வாணம்
பிறகு 4 பேரும் அந்த சிறுமியின் டிரஸ்ஸை திருப்பி கொடுக்காமலேயே, அவரது ஊரில் இறக்கி விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.. இதனால் டிரஸ் இல்லாமல் பாதிக்கப்பட்ட மாணவி நடுரோட்டிலேயே கதறி அழுதுள்ளார்.. அப்படியே அழுதுகொண்டே அவர் வீட்டுக்கு சென்றார்.. நிர்வாணமாக அந்த சிறுமி நடந்து செல்லும் இந்த வீடியோ வெளியாகி மிகப்பெரிய அதிர்ச்சியை அந்த சமயம் ஏற்படுத்தியது.. இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், நிர்வாண கோலத்தில் மகள் வந்து நின்றும், நடந்த சம்பவத்தை சொல்லியும்கூட, அந்த பெண்ணின் பெற்றோர் தரப்பில் இருந்து ஒருத்தரும் புகார் எதுவுமே தரவில்லையாம்..

கப்சிப் ஷாக்
அதற்கு பிறகு போலீசார்தான் முன்வந்து, இந்த விஷயத்தை கையில் எடுத்து, வழக்கு பதிவு செய்தனர்.. இது தொடர்பாக பெற்றோரிடம் போலீஸ் எஸ்பியே நேரில் சென்று விசாரித்தார்.. "என் மகளுக்கு அப்படி எதுவுமே நடக்கவில்லையே" என்றார்களாம் அந்த பெற்றோர்.. கடைசியில், வீடியோ ஆதாரங்கள் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸார் சொல்லவும், கப்சிப் ஆகிவிட்டார்கள்.. ஒருவரை கைது செய்து, மற்ற 3 பேரை தேடியும் வருகிறார்கள்.. இதோ, இப்போது இன்னொரு கொடுமை மத்தியபிரதேசத்தில் நடந்துள்ளது.

No 100
போபால் சத்னா மாவட்டம் கேரா கிராமத்தை சேர்ந்த அந்த இளம்பெண், தனிமையில் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ரிஷி பட்டேல், சிவகுமார் பட்டேல், மகேந்திர பட்டேல் உள்ளிட்டோர், கடந்த மாதம் குடித்துவிட்டு, அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று வம்பு செய்துள்ளதாக தெரிகிறது... இதனால் பதறிப்போன அந்த பெண், உடனடியாக 100க்கு போன் செய்து, அந்த இளைஞர்கள் மீது புகார் கொடுத்தார்.. போலீசாரும் விரைந்து வந்து, அந்த நபர்களை சுற்றிவளைத்து கைது செய்து, ஜெயிலிலும் அடைத்தனர். ஆனால் 3 பேருமே அடுத்த சில நாளில் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர்..

ஜாக்கெட்
அந்த பெண் தங்களை போலீசில் பிடித்துக் கொடுத்த காரணத்தினால் ஆத்திரமடைந்த கும்பல், 2 நாளைக்கு முன்பு மறுபடியும் அந்த பெண்ணின் வீட்டிற்குள் புகுந்துள்ளது.. அப்பெண்ணை வீட்டில் இருந்து வெளியில் இழுத்துவந்து, உடைகளை உருவி, அரைநிர்வாணப்படுத்தி, தெருவெல்லாம் தரதரவென இழுத்து சென்றுள்ளனர்.. அந்த தெரு முடிந்ததும், இன்னொரு தெருவில் இதேபோல பலமணிநேரம் இழுத்து சென்றனர்... அரை நிர்வாணமாக இழுத்து சென்றதுடன், 3 பேருமே அந்த பெண்ணை அடிக்கடி கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்துள்ளனர்.. இதில் அந்த பெண் அவமானம் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு கதறினார்..

பாவாடை + ஜாக்கெட்
ஆனால் ஒவ்வொரு தெருவிலும் எல்லாரும் வேடிக்கை பார்த்தார்களே தவிர, ஒருத்தர்கூட இதை தட்டிக்கேட்கவுமில்லை.. அந்த கும்பலை தடுக்கவுமில்லை.. ஆனால், செல்போனில் இதை வீடியோவாக வளைத்து வளைத்து எடுத்தனர்.. நீண்ட நேரம் கழித்துதான், விஷயம்தெரிந்து, அந்த பெண்ணின் உறவினர்கள் ஓடிவந்து அந்த கும்பலை தடுத்த முயன்றும், அவர்களால் முடியவில்லை.. வெறும் பாவாடை மற்றும் ஜாக்கெட்டுடன் அந்த பெண் மானபங்கம் செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் வீடியோவாக வைரலாகி வருகிறது... இதையடுத்துதான், போலீஸ் அதிகாரிகள் இந்த விஷயத்திலும் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளதுடன், சம்பந்தப்பட்ட அந்த 3 பேரையும் கைது செய்துள்ளனர்.

குச்சி
இதே மத்திய பிரதேசம் மாநிலம், அலிராஜ்பூர் பகுதியில் இதுபோலவே ஒரு சம்பவம் நடந்தது.. அந்த இளம்பெண் ஒரு பழங்குடி இனத்தை சேர்ந்தவர்.. வேறு சாதி இளைஞர் ஒருவரை காதலித்துள்ளார். வீட்டில் எப்படியும் தங்கள் காதலை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால், காதலர்கள் ஊரைவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால்தான் விஷயம் அறிந்த ஊர்மக்கள், அந்த பெண்ணை இழுத்து வந்து சேலையை உருவி அடித்தனர்.. அரை நிர்வாண கோலத்துடனேயே ஊருக்குள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். வெறும் பிளவுஸ், பாவாடை அணிந்தவாறு உள்ள அந்த பெண்ணை, குச்சியால் கண்மூடித்தனமாக ரோடெல்லாம் அடித்து இழுத்து வருகிறார்கள். இது சம்பந்தமான வீடியோவும் அப்போது பரவியது.. ஊரே வேடிக்கை பார்த்த நிலையில், இது தொடர்பாகவும் போலீசில் அப்போது ஒருத்தரும் புகார் தரவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
தஞ்சை அருகே ஷாக்.. கணவர் - சொந்த அக்காவுக்கு நள்ளிரவில் நேர்ந்த கொடூரம்.. சிக்கிய மனைவி அமுதா -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
டிசிஎஸ் தொடர்ந்து விப்ரோ.. பாலியல் அச்சுறுத்தல், உடலுறவு, மதமாற்றம்.. பெண் ஐடி ஊழியரின் பகீர் புகார்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications