எபோலா அறிகுறியுடன் டெல்லி வந்த நைஜீரிய முதியவர் - புனேயில் ரத்த மாதிரி ஆய்வு
டெல்லி: டெல்லி வந்த நைஜீரிய முதியவருக்கு எபோலா அறிகுறி காணப்பட்டதால் அவரது ரத்த மாதிரி புனேக்கு அனுப்பப் பட்டுள்ளது.
பயங்கர உயிர்க்கொல்லி நோயான எபோலா உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை இந்நோய்க்கு ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் இந்நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நோய்ப் பரவலைத் தடுக்கும் வகையில் சர்வதேச சுகாதார அவசர நிலையை பிரகடனப் படுத்தியுள்ளது உலக சுகாதார நிறுவனம். மற்ற நாடுகளும் இந்நோய் பரவா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன.

எபோலா நோய்த் தாக்கமுள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகள், விமான நிலையத்தில் தீவிர சோதனைக்கு ஆளாக்கப் படுகிறார்கள். நோய்த் தொற்று அறிகுறி காணப்படுபவர்கள் மேற்கொண்டு சோதனைக்கு உள்ளாக்கப் படுகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை டெல்லி வந்த நைஜீரிய முதியவருக்கு எபோலா காய்ச்சல் அறிகுறி காணப்பட்டதால், உடனடியாக அவருக்கு முதற்கட்ட எலீசா ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், அதில் தெளிவான முடிவுகள் தெரிய வராததால் அவரது ரத்த மாதிரி புனே சோதனை மையத்திற்கு அனுப்பப் பட்டுள்ளது.
நைஜீரிய முதியவருடன் வந்த மற்ற இரண்டு பயணிகளுக்கு எபோலா நோய் அறிகுறிகள் எதுவும் காணப்படாததால் அவர்கள் இருவரும் அனுப்பி வைக்கப் பட்டனர். எபோலா பாதிப்பு காணப்பட்ட முதியவரை மட்டும் டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதித்து கண்காணித்து வருகின்றனர்.
அதேபோல், நேற்று காலை நைஜீரியாவிலிருந்து டெல்லி வந்த மேலும் இருவர் உட்பட இதுவரை 5 பேருக்கு எபோலா ரத்த மாதிரி சோதனை நடத்தப் பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications