மே.வங்கத்தில் பெருமளவு பணத்துடன் சிக்கிய ஜார்க்கண்ட் காங். எம்எல்ஏக்கள்- ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி?
ஹவுரா: மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் பெருமளவு பணத்துடன் ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் பாஜகவின் சதிதான் இதன் பின்னணியில் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
மேற்கு வங்க மாநில ஆசிரியர் நியமன தேர்வு முறைகேடு ஒட்டுமொத்த நாட்டையே அதிரவைத்துக் கொண்டிருக்கிறது. முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் 2016-ல் பார்த்தா சட்டர்ஜி கல்வி அமைச்சராக இருந்தார். அப்போது பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் நியமனத்தில் மிகப் பெரும் ஊழல் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இந்த ஊழல் புகாரில் பார்த்தா சாட்டார்ஜி அண்மையில் கைது செய்யப்பட்டார்.

மேலும் பார்த்தா சாட்டர்ஜிக்கு மிக நெருக்கமான அர்பிதா முகர்ஜியும் சிக்கினார். அவருக்கு சொந்தமான பங்களாக்களில் இருந்து ரூ.28 கோடி ரொக்கம், தங்க நகைகளை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து அதிர வைத்தனர். ஆனால் இவை அனைத்தும் தம்மை சிக்க வைக்க நடந்த சதி என புலம்பி இருந்தார் பார்த்தா சாட்டர்ஜி.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்களான இர்பான் அன்சாரி, ராஜேஷ், நாமன் பிக்ஸால் கோங்காரி ஆகியோர் பயணம் செய்த கார் ஒன்றில் இருந்து பெருமளவு பணத்தை அம்மாநில போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த பணத்தை எண்ணுவதற்காக கவுண்ட்டிங் மெஷின்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக ஹவுரா போலீஸ் அதிகாரி ஸ்வாதி பங்காளியா கூறுகையில், கார் ஒன்றில் பெருமளவு பணம் எடுத்துச் செல்லப்படுவதாக தகவல் கிடைத்தது. அதனால் அந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினோம். கவுண்ட்டிங் மெஷின் மூலம் பணம் எண்ணப்பட்டு பின்னர்தான் எவ்வளவு கிடைத்தது என சொல்ல முடியும் என்றார்.
ஜார்க்கண்ட் பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராஜேஷ் தாகூர் கூறுகையில், பாஜக அல்லாத அரசுகளை கவிழ்ப்பதில் தீவிரம் காட்டுகின்றனர். இது நீண்டகாலம் நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிரா ஆட்சி எப்படி கவிழ்க்கப்பட்டது என்பதை அனைவரும் பார்த்து கொண்டிருந்தனர். தற்போது ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் பணம் சிக்கி இருப்பதன் பின்னணியிலும் பாஜகதான் இருக்கிறது என்றார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பாஜகவின் திரவுபதி முர்முவுக்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆதரவு தெரிவித்தது. அத்துடன் தேர்தலின் போது காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிலரும் வாக்களித்தனர். இதனால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சியை கவிழ்க்கும் சித்துவேலையை பாஜக தொடங்கிதாக கூறப்பட்டது. இந்த நிலையில் பெருந்தொகையான பணத்துடன் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிக்கியிருப்பது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கல்லூரியில் ரகசிய பெட் ரூம்கள்.. உள்ளே பாக்கெட் பாக்கெட்டாக ஆணுறைகள்! கூடவே கைத்துப்பாக்கி வேற! -
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications