ஹைதராபாத்தில் தூண் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி: 4 பேர் படுகாயம்
ஹைதராபாத்: ஹைதராபத்தில் கட்டுமானப் பணியின் போது தூண் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் கட்டிட தொழிலாளர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஹைதராபாத் ஜவகர்லால் நேரு தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம் அருகில் உள்ள குகட்பள்ளி, சி.பி.சி.ஐ.டி. காலனியில் வளைவு கட்டுமானப் பணி நடைபெறுகிறது. நேற்று மாலை 4 மணியளவில் பணி கட்டிட வேலை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென தூண் ஒன்று இடிந்து விழுந்தது.

இதில் இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்கள் தர்மாராவ், நாகபூஷனம், ஜனார்த்தன் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த சிலர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனனர். இந்த விபத்து தொடர்பாக கட்டுமான காண்ட்ராக்டர் சுபாஷ் மீது கே.பி.எச்.பி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சம்பவ இடத்திற்கு பெருநகர நகராட்சி ஆணையர் சென்று பார்வையிட்டதுடன், இதுபற்றி விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார். திரைப்பட நகரில் கடந்த மாதம் 24-ம் தேதி கட்டுமானப் பணி நடைபெற்ற கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications