சத்தீஷ்கரில் பாதுகாப்பு படையினரின் அதிரடி தாக்குதலில் 3 பெண் மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
ராய்ப்பூர்: சத்தீஷ்கரில் பாதுகாப்பு படையினர் மற்றும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் இடையே நடைபெற்ற சண்டையில் மூன்று பெண் மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சுக்மா மாவட்டத்தின் கதிராஸ் பகுதியில் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் உள்ளூர் போலீசாருடன் இணைந்து மாவோயிஸ்டுகள் பதுங்கியிருந்த பகுதியை முற்றுகையிட்டனர். அப்போது, பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்கள் பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படை வீரர்களும் பதிலடி கொடுத்தனர்.

இரு தரப்பினருக்கும் இடையே சுமார் ஒரு மணி நேரம் நீடித்த சண்டையில் 3 பெண் மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சண்டை நடைபெற்ற இடத்தில் இருந்து பெருமளவு ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பாதுகாப்பு படையினரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அங்கிருந்து மாவோயிஸ்டுகளில் பலர் தப்பியோடி விட்டனர்.
இதற்கிடையே, நாராயண்பூர் மாவட்டத்தின் கரலாகாட் என்னும் இடத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் புரன் பொத்தாய் போலீஸ்காரர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிர் இழந்தார். மேலும் 4 போலீசார் படுகாயம் அடைந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications