புல்வாமாவில் மீண்டும் தீவிரவாதிகள் அட்டகாசம்.. ராணுவத் தாக்குதலில் 3 பேர் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்: காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடனான சண்டையில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த முக்கிய தீவிரவாதிகள் 3 பேர் பலியாகிவிட்டனர். ஒரு பாதுகாப்பு படை வீரர் வீரமரணமடைந்தார்.
தெற்கு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் தாலிபோரா என்ற பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் போலீஸ், ராணுவம், சிஆர்பிஎஃப் படை வீரர்கள் என சுற்றி வளைத்தனர்.

அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் போலீஸாரை நோக்கி சுட்டனர். பதிலுக்கு போலீஸாரும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இந்த பரஸ்பர துப்பாக்கிச் சண்டையில் ஒரு பாதுகாப்பு வீரர் சந்தீப் வீரமரணமடைந்தார். மேலும் ஒரு வீரரும் அப்பகுதிவாசியும் காயமடைந்தனர்.
ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் புல்வாமாவை சேர்ந்த நசீர் பண்டித், சோபியானை சேர்ந்த உமர் மிர், பாகிஸ்தானை சேர்ந்த காலித் பாய் ஆகியோராவர். இவர்கள் மூவரும் கடந்த 8 ஆண்டுகளாக தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் 70-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தேசிய நெடுஞ்சாலையில் 2500-க்கும் மேற்பட்ட வீரர்கள் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வெடிப்பொருள்களை ஏற்றிக் கொண்டு ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தீவிரவாதி, வீரர்களின் வாகனங்களின் மீது மோதினார்.
இதில் 40 சிஆர்பிஎஃப் படையினர் பலியாகிவிட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தி அந்த தீவிரவாத அமைப்பின் முகாம்களை அழித்தது.
Jammu and Kashmir: Army Jawan Sepoy Sandeep (in pic) who lost his life in Pulwama encounter earlier today; three terrorists were neutralised in the encounter. pic.twitter.com/trSZkJnYmQ
— ANI (@ANI) May 16, 2019
இதற்கு பழிக்கு பழி வாங்குவதற்காக இந்திய வான்வெளி எல்லையில் பாகிஸ்தான் விமானங்கள் தாக்குதல் நடத்த ஊடுருவின. அவற்றையும் இந்திய விமான படை சாதுர்யமாக செயல்பட்டு புறமுதுகிட்டு ஓட செய்தது.
இத்தனை நாட்களாக வாலை சுருட்டி வைத்திருந்த தீவிரவாதிகள் இன்று புல்வாமாவில் மீண்டும் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். அவர்களை இந்திய ராணுவமும், துணை ராணுவமும், போலீஸும் திறமையாக கையாண்டன.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications