அயோத்தியில் 30 'பாம் ஸ்குவாடு'கள் குவிப்பு.. தீவிரவாத தாக்குதல் அபாயம் எதிரொலி!
அயோத்தி: அயோத்தியில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 30 வெடிகுண்டுகளை கண்டுபிடித்து அகற்றும் படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அயோத்தி தீர்ப்பு நெருங்கி வருகிறது. இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. குறிப்பாக அயோத்தியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அயோத்தி முழுவதும் போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே அங்கு தீவிரவாத தாக்குதல் நடைபெறலாம் என்ற அச்சத்தால் வெடிகுண்டுகளை கண்டுபிடித்து அழிக்கும் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். 30 படைகள் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அயோத்தியில் உள்ள தர்மசாலாக்களில் தங்கியுள்ளோர் நவம்பர் 12ம் தேதிக்குள் வெளியேறி விட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து தர்மசாலாக்களையும் வருகிற செவ்வாய்க்கிழமை இரவுக்குள் காலி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. உள்ளூரைச் சேர்ந்தவர்களைத் தவிர வேறு யாரும் அங்கு இருக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய துணை ராணுவப் படையினர் மற்றும் மாநிலப் போலீஸார் உள்பட 300 கம்பெனி பாதுகாப்புப் படையினர் அயோத்தியில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.
சர்ச்சைக்குரிய நிலத்திற்கு அருகே உள்ள ராம் கோட் பகுதிக்குச் செல்லும் அனைத்து சாலைகளும் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே அயோத்தி தீர்ப்பையொட்டி நாடு முழுவதும் மிகுந்த விழிப்புணர்வுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications