ஆந்திரா: தனியார் பேருந்து தீ விபத்து.. பயணித்த 45 பேரும் பலியான பரிதாபம்!!
ஆந்திரா: ஆந்திரா அருகேயுள்ள மெகபூப் நகரில் தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணித்த 45 பேரும் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் இருந்து ஹைதராபாத்துக்கு 45 பேருடன் தனியார் பேருந்து நேற்று இரவு புறப்பட்டது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஆந்திரா மாநிலம், மெகபூப் நகர் மாவட்டம், பலீம் என்ற ஊர் அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சாலை தடுப்பில் பேருந்து மோதியது.

இதில் டீசல் டேங்க் வெடித்தில் பேருந்து தீப்பிடித்தது. மளமளவென தீ பரவியதில் பேருந்தில் உறங்கிக் கொண்டிருந்த பயணிகள் 38 பேர் கருகி உயிரிழந்துள்ளனர். எஞ்சிய 7 பேரும் மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் சிகிச்சை பலனின்றி எஞ்சிய 7 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கருகிய உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.













Click it and Unblock the Notifications