சட்டீஸ்கர்: மனைவி, குழந்தையை கோடாரியால் வெட்டிக் கொன்ற குடிகாரன்
ராய்ப்பூர்: குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மனைவி, மாமியாரையும், பச்சிளம் குழந்தையையும் கோடாரியால் வெட்டிக் கொலை செய்துள்ளான் ஒரு குடிகாரன்.
சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள சிறிய கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹல்கே பால் என்ற அந்தக்குற்றவாளி சட்டீஸ்கரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கட்டாரா கிராமத்தில் தனது மனைவி ஜனக் பாய் உடன் வசித்து வந்தான். சம்பவ தினத்தன்று குடிபோதையில் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்படவே வீட்டிற்குள் இருந்த கோடாரியை எடுத்துவந்து மனைவியை வெட்டி சாய்த்தான்.
தடுக்க வந்த மாமியாரையும் கோடாரியால் வெட்டினால் ஆனாலும் ஆத்திரம் தீராமல் இரண்டு மாத குழந்தையையும் வெட்டினான். இதில் ஜனக் பாய் அதே இடத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். காயமடைந்த மாமியாரும் குழந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி மாமியார் உயிரிழந்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளி ஹல்கே பாலை கைது செய்தனர். இது குறித்து பேசிய ஜனக்பாயின் சகோதரர், கோவிந்தபால், தனது சகோதரிக்கு கடந்த ஆண்டுதான் ஹல்கே பாலுடன் திருமணம் நடைபெற்றது.
குடிகாரன் என்று தெரியாமல் திருமணம் செய்து கொடுத்துவிட்டோம். அதுவே என் சகோதரிக்கு எமனாக அமைந்துவிட்டது என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications