300 ஆடுகள்.. ராஜஸ்தான் தூக்கத்தை கெடுத்த "பாகிஸ்தான் ஆடு".. வேலி தாண்டிய வெள்ளாடால் விழித்த வீரர்கள்

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: வேலி தாண்டி ஆடுகள் புகுந்துவிட்ட விவகாரம், இந்திய எல்லையில் இடைஞ்சலை ஏற்படுத்தி வருகிறது. எல்லைக்குள் புகுந்த ஆடுகளை என்ன செய்வது என்று தெரியாமல், எல்லை பாதுகாப்பு படையினரும் குழம்பி போய் தவித்து வருகிறார்களாம்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது பார்மர் மாவட்டம்.. இது இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் அமைந்திருக்கிறது.. இந்த 2 நாட்டு எல்லையில் கம்பி வேலி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது..

300 goat jaipur pakistan barmer 300

கம்பி வேலி: ஆனால், இந்த வேலியில், ஓரிடத்தில் சேதம் ஏற்பட்டிருக்கிறது.. இதனால் கம்பிகள் உடைந்து, பெரிய ஓட்டை போல விழுந்துள்ளது.. பார்ப்பதற்கு சந்து போலவே இருப்பதால், இந்த ஓட்டைக்குள் பாகிஸ்தான் எல்லையில் மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகள் வந்துவிடுகின்றன.. இப்படியே 300க்கும் மேற்பட்ட ஆடுகள், பாகிஸ்தான் எல்லையிலிருந்து, இந்திய எல்லைக்குள் வந்துவிட்டன.

ஜூலை 20ம் தேதியே இந்த ஆடுகள் நுழைந்துவிட்டதாம். இதை அப்போதே எல்லை பாதுகாப்பு படையினர் கவனித்து, பாகிஸ்தான் எல்லையிலுள்ள வீரர்களுக்கு போனை போட்டு தகவல் தெரிவித்துள்ளனர்.. ஆனால், அவர்கள் இந்த ஆடு விஷயத்தை காதில் போட்டுக் கொள்ளவேயில்லையாம்.. திரும்ப திரும்ப நம்முடைய வீரர்கள் இதைபற்றி சொன்னாலும், ஆடுகளை மீட்டுச்செல்வதற்கு அவர்கள் எந்த ஆர்வமும் காட்டவில்லையாம்.. அவர்கள் ஆடுகள் இங்கிருப்பதை பற்றி கண்டுகொள்ளவுமில்லையாம்.

வேலி சந்துகள்: இது குறித்து பிஎஸ்எப் அதிகாரி ஒருவர் சொல்லும்போது, எல்லையையொட்டி ஆடுகள் மேய்ப்பது பற்றி ஏற்கனவே பாகிஸ்தானின் துணை ராணுவ படையினரை தொடர்பு கொண்டு புகார் தந்துவிட்டோம். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இப்போது ஆடுகள் வேலி சந்துக்குள் புகுந்து இந்தியாவுக்கு வந்து விட்டன. ஆடுகளை திரும்ப வாங்கவும் மறுக்கிறார்கள்..

இந்த ஆடுகள் விவகாரத்தை எப்படி சமாளிப்பது என்றே தெரியவில்லை.. அதனால், இதனை சமாளிக்க உதவும்படி தொண்டு நிறுவனத்தினரிடம் கேட்டோம்... ஆனால் அவர்களும் இதற்கு உதவ முன் வரவில்லை...

இறுதி முடிவு: வேறு வழியின்றி உள்ளூர் ஆட்களை வைத்து நாங்களே ஆடுகளை மேய்த்து கொண்டிருக்கிறோம்.. பாகிஸ்தான் படையினரை நாங்கள் அடுத்த முறை பார்த்தால், மறுபடியும் இந்த விவாகரத்தை பற்றி சொல்லலாம் என்று உள்ளோம். அப்படியும் அவர்கள் தங்களது ஆடுகளை மீட்க வரவில்லயானால், சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்துவிட போகிறோம்" என்றார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+