நாடாளுமன்ற கூட்டம்: தமிழக எம்.பி.க்கள் 31 பேர் 100% அட்டென்டஸ்!! அதிக விவாதங்களில் பங்கேற்பு!!
டெல்லி: நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தமிழக எம்.பி.க்கள் 31 பேர் பேர் அனைத்து நாட்களும் சபை நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளனர்.
நாடாளுமன்றத்துக்கு தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள 39 எம்.பி.க்களில் 37 பேர் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். எஞ்சிய இருவரில் ஒருவர் பா.ஜ.க.வைச் சேர்ந்த பொன். ராதாகிருஷ்ணன், மற்றொருவர் பா.ம.க.வைச் சேர்ந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ்.
அ.தி.மு.க. எம்.பி.க்கள் 37 பேரில் பெரும்பாலானவர்கள் நாடாளுமன்றத்துக்கு முதன் முதலாக தேர்வு செய்யப்பட்டவர்கள். புதமுகங்களாக இருந்த போதிலும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் 37 பேரும் சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

33 நாட்களும் பங்கேற்ற 31 எம்.பிக்கள்
முடிவடைந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் நேற்று முன் தினம் வரை 33 நாட்கள் நடைபெற்றது. இந்த 33 நாட்களும் ஒரு நாள் கூட தவறாமல், அ.தி.மு.க.வைச் சேர்ந்த 31 எம்.பி.க்கள் கூட்டத் தொடரில் கலந்து கொண்டுள்ளனர்.

புதிய சாதனை
33 நாட்களும் இந்த 31 எம்.எல்.ஏ.க்கள் விவாதங்களில் பங்கேற்று பேசியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழக எம்.பி.க்களின் இந்த சபை பங்கேற்பு புதிய சாதனையாக கருதப்படுகிறது.

வடசென்னை வெங்கடேஷ்பாபு
அ.தி.மு.க. எம்.பி.க்களில் வடசென்னை எம்.பி. வெங்கடேஷ்பாபு மொத்தம் 71 கேள்விகளை எழுப்பினார். தமிழக எம்.பி.க்களில் அதிக கேள்விகள் கேட்டிருப்பது இவர்தான்.

திருவள்ளூர் வேணுகோபால்
இவரைத் தொடர்ந்து திருவள்ளூர் எம்.பி. டாக்டர் வேணுகோபால் 69 கேள்விகள் கேட்டு 2-வது இடத்தில் உள்ளார். இவர்கள் இருவரும் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு போன்ற அன்றாட பிரச்சினைகள் பற்றியே அதிக கேள்விகளை எழுப்பியது தெரிய வந்துள்ளது.

ஹெலிகாப்டர் விவகாரம்
வெங்கடேஷ்பாபு எம்.பி. கேள்வி கேட்ட பிறகே இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களை பயன்படுத்திய தனியார் நிறுவனங்கள் ரூ.26 லட்சம் வாடகையை பாக்கி வைத்திருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications