காஷ்மீர் எல்லையில் பாக். தாக்குதல்.. இந்திய ராணுவம் அதிரடி பதிலடி.. 35 தீவிரவாதிகள் பலி?
இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர் எல்லையில் நடத்திய தாக்குதலில் 35 தீவிரவாதிகள் பலியானதாக தகவல்கள் வருகிறது.
Recommended Video
ஸ்ரீநகர்: இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர் எல்லையில் நடத்திய தாக்குதலில் 35 தீவிரவாதிகள் பலியானதாக தகவல்கள் வருகிறது.
இந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே காஷ்மீர் எல்லையில் கடுமையான சண்டை நடந்து வருகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றதை அடுத்து வரிசையாக இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவ முகாம்கள் மீது பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. 12 மணி நேரமாக இந்த தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சண்டை ஏன்?
பிஓகே எனப்படும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியான டாங்தார் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம் அமைத்துள்ளனர். இந்தியாவிற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதை முறியடிக்கும் பொருட்டு இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

எப்படி
இந்த தாக்குதல் 4-5 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளது. இன்னும் 4 தீவிரவாத முகாம்கள் அங்கு இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. டிரோன்கள் மூலம் இந்திய ராணுவம் இதை வேவு பார்த்து தாக்கி அழிக்க திட்டமிட்டுள்ளது.

பலி
இந்த ராணுவ தாக்குதலில் 35 தீவிரவாதிகள் பலியானதாக கூறப்படுகிறது. 5 முகாம்களில் இருந்த அனைத்து தீவிரவாதிகளும் பலியாகிவிட்டனர் என்று கூறப்படுகிறது. இவர்கள் எல்லோரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன தொடரும்
இந்த அதிரடி தாக்குதலால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் தரப்பு, தற்போது இந்திய தூதரிடம் சம்மன் அனுப்பி உள்ளது. இந்த தாக்குதல் நடந்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பி இருக்கிறது.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
ஐஎஸ்ஐ தீவிரவாதிகளின் புது சதி.. இந்திய அரசியலுக்குள் ஊடுருவ திட்டம்.. அதிர வைக்கும் பயங்கர பிளான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications