குளியலறை கழிவுநீரை குடித்த அனுராதா.. கருத்தரிக்க ராத்திரியில் நடந்த அட்டகாசம்.. உத்தர பிரதேசம் பகீர்

Subscribe to Oneindia Tamil

கான்பூர்: இந்தியாவில் நாளுக்கு நாள் மூடநம்பிக்கைகள் பெருகி கொண்டிருக்கின்றன.. உலகளாவிய அளவில் மூட நம்பிக்கைகள் இருந்தாலும், நம்முடைய நாட்டில் மூட நம்பிக்கைகளுக்கு பலியாகுவோர்கன் எண்ணிக்கைகள் பெருகுவது கிலியை உருவாக்கி வருகிறது. ஏற்கனவே நரபலி போன்ற பயங்கரங்களை தடுக்க முடியாமல் திணறி கொண்டிருக்கும்போது, சடங்குகளின்போதே பெண்கள் இறப்பது தொடர்கதையாகிவிட்டது.. அதிலும், படித்தவர்களே, இதுபோன்ற மூட நம்பிக்கைகளில் ஈடுபடுவது அதைவிட வேதனையை நமக்கு தந்து கொண்டிருக்கிறது..!!

கர்நாடகாவில் 2 நாட்களுக்கு முன்புதான் ஒரு கொடுமை நடந்தது.. சிவமுகா மாவட்டத்திலுள்ள ஜம்பரகட்டா என்ற கிராமத்தை சேர்ந்த 32 வயது கீதாவுக்கு, சில காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.. உடலும் மெலிந்து காணப்பட்டது. இரவிலும் தூக்கம் வராமல் அலறி வந்துள்ளார்.

uttar pradesh anuradha toilet water

கீதாவின் உடல்நிலை

பல இடத்தில் சிகிச்சை தந்தும், கீதாவின் உடல்நிலை சரியாகவில்லை. இதனால், கீதாவிற்கு பேய் பிடித்திருக்குமோ? என்று குடும்பத்தினர் சந்தேகப்பட்டு, அந்த ஊரிலுள்ள பெண் மந்திரவாதியிடம் கீதாவை அழைத்து சென்றுள்ளனர்.. பெண் மந்திரவாதியும், இரவு பூஜை நடத்த வேண்டும் என்று கூறி, ஜோதிட கட்டங்களில் கீதாவை உட்கார வைத்து, சுற்றிலும் தீ மூட்டி, விபூதி அடித்தார்.. பிறகு, கம்பு எடுத்து கீதாவை கொடூரமாக தாக்கினார்..

ஏற்கனவே எலும்பும் தோலுமாக இருந்த கீதா, வலி பொறுக்க முடியாமல் கதறி கொண்டே கீழே விழுந்து இறந்துவிட்டார்.. இதைக்கேள்விப்பட்டு ஆத்திரமடைந்த ஊர்மக்கள், பெண் மந்திரவாதி குறித்து ஹொன்னுார் போலீசுக்கு தகவல் தரவும், தற்போது பெண் மந்திரவாதி கைதாகி உள்ளார். ஆனால், மூடநம்பிக்கையால் கீதாவின் உயிர் போய்விட்டது.

அனுராதாவுக்கு குழந்தை இல்லை

இன்னொரு ஷாக் சம்பவம், உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது. அனுராதா என்ற 35 பெண்ணுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாகின்றன.. ஆனால், இன்னும் குழந்தை இல்லை.. எனவே, தன்னுடைய அம்மாவை அழைத்துக் கொண்டு மந்திரவாதி ஒருவரை சென்று பார்த்தார்.

மந்திரவாதியும், அனுராதாவுக்கு பேய் பிடித்திருப்பதாக சொல்லி, அந்த பேயை விரட்டவும், கருத்தரிக்கவும், பூஜை செய்ய போவதாகவும், அதற்கு 1 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் சொன்னார்.. உடனே அனுராதா அட்வான்ஸ் பணம் ரூ.22 ஆயிரம் தந்துள்ளார்..

சடங்குகள் - கழிவுநீர்

பிறகு அதற்கான சடங்குகளையும் மந்திரவாதி ஆரம்பித்தார்.. அப்போது அனுராதாவின் தலைமுடியை இழுத்துப்பிடித்து, கழிவறை நீரை குடிக்க கட்டாயப்படுத்தியிருக்கிறார்.. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அனுராதாவின் அம்மா, அதை தடுக்க முயன்றுள்ளார்.. ஆனாலும், அனுராதாவுக்கு தொடர்ந்து கழிவு நீரை குடிக்க வைத்தார் மந்திரவாதி..

இதனால், அந்த பூஜை செய்து கொண்டிருந்தபோதே, அனுராதாவின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு, கீழே விழுந்துவிட்டார்.. இதனால், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு சென்றுள்ளார்கள்.. ஆனால், அனுராதா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மந்திரவாதி - சிஷ்யர்கள்

கருத்தரிக்க பூஜை செய்வதாக சொல்லி மகளின் உயிரை பறித்த மந்திரவாதி மீது, இதுகுறித்து அனுராதாவின் அப்பா உள்ளிட்ட உறவினர்கள் போலீஸில் புகார் தந்தார்கள்.. இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மந்திரவாதியை அதிரடியாக கைது செய்தனர்.. ஆனால், அவருடனிருந்த சிஷ்யர்களை காணவில்லையாம்.. எனவே, போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்..

இப்படி மூட நம்பிக்கையால் இளம்பெண்கள் உயிரிழந்து வருவது, பொதுமக்களுக்கு அதிர்ச்சியையும், கவலையையும் தந்து கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+