ஜம்மு காஷ்மீரில் பயங்கர விபத்து: 300 அடி பள்ளத்தில் பாய்ந்த பேருந்து.. 36 பேர் பலி-19 பேர் படுகாயம்!
ஸ்ரீநக: ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் 300 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் பலியாகினர். 19 பேர் படுகாயமடைந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் படோடே-கிஷ்த்வார் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்த போது திடீரென நிலை தடுமாறியது. இந்த பேருந்து துருங்கல்- அஸ்ஸார் அருகே 300 அடி கிடுகிடு பள்ளத்தில் பயணிகளுடன் கவிழ்ந்து உருண்டு பெரும் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 36 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 19 பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். இவர்களில் 6 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் ஜம்மு காஷ்மீர் பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் பேருந்து விபத்தில் 36 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் அதிர்ச்சியும் ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளனர். மேலும் பிரதமர் மோடி, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ 2 லட்சமும் படுகாயமடைந்தோருக்கு தலா ரூ 50,000 நிவாரண உதவி தொகை வழங்கப்படும் எனவும் தமது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமது எக்ஸ் பக்கத்தில், ஜம்மு காஷ்மீர் பேருந்து விபத்தில் 36 பேர் பலியான சம்பவம் பெரும் துயரைத் தருகிறது. பேருந்து விபத்துக்குள்ளான இடத்தில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications