நிலநடுக்க அபாயத்தின் மேலமர்ந்திருக்கும் இந்தியாவின் 38 நகரங்கள்.. ஒரு ஷாக் ரிப்போர்ட்!
டெல்லி: நிலநடுக்கத்தால் பெரும் அழிவைச் சந்தித்துள்ளது நேபாளம். இந்நிலையில், 38 இந்திய நகரங்கள் கடும் ஆபத்தான நில அதிர்வு மண்டலங்களைக் கொண்டிருப்பதாக இந்தியாஸ்பெண்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அவ்வாறு நடந்தால் அந்நகரங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களில் பெருத்த சேதாரம் ஏற்படும் என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று நேபாளத்தில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் மூவாயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்திய மாநிலங்களிலும் காணப்பட்டது. பீகார்,உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நிலநடுக்கத்தில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
கடந்த 1962ம் ஆண்டு முதலில் வெளியிடப்பட்ட பீரோ ஆப் இந்தியன் ஸ்டேண்டர்ட்ஸ் வழிகாட்டுதலின் படி இந்தியாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவே நிலநடுக்கத்திலிருந்து பாதுகாக்கும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்தியாவில் பெரும்பாலானோர்க்கு தங்களது வீடு நிலநடுக்கத்தைத் தாங்கும் வல்லமையோடு கட்டப்பட்டிருக்கிறதா என்ற விழிப்புணர்வு கூட இருப்பதில்லை.

பூஜ் நிலநடுக்கம்...
தலைநகர் டெல்லியிலும் ஒரு சிலரே இத்தகைய பாதுகாப்பான கட்டிடங்களைக் கட்டியுள்ளனர். ஆனால், குஜராத்தில் பூஜ் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, நிலநடுக்கத்தால் பாதிக்கப்படாத வீடுகளைக் கட்டும் விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது.

நிலைமை மாறவில்லை...
ஆனால், பல இடங்களில் இன்னமும் நிலைமை மாறவில்லை. நில அதிர்வு மண்டலம் என அறியப்படாத மகாராஷ்டிராவில் கடந்த 1993ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பலியானார்கள். குஜராத்தில் முறையாகக் கட்டப்பட்ட கட்டிடங்களும் கூட நிலநடுக்கத்தில் நொறுங்கி விழுந்ததால் மக்கள் கவலையடைந்தனர்.

38 நகரங்கள்...
இந்நிலையில், இந்தியாவில் 38 நகரங்களில் நில அதிர்வு மண்டலங்கள் காணப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நகரங்களில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களில் பெரும்பாலானவை நிலநடுக்கத்தால் பாதிக்கப் படாத தன்மையுடன் கட்டப் படவில்லை. எனவே, நிலநடுக்கம் ஏற்பட்டால் இந்த நகரங்கள் பெரும் அழிவைச் சந்திக்கும்.

நிலநடுக்கத்திற்கான காரணங்கள்...
பூமியின் அடித்தட்டில் பல அடுக்குகள் அமைந்துள்ளன. அவை ஒன்றோடு ஒன்று மோதுவதாலேயே நிலநடுக்கம் ஏற்படுகின்றது. சிறு சிறு அதிர்வுகளை விட ஓரளவுக்கு பெரிய அதிர்வுகளையே மக்களால் உணர முடிகிறது.

தனித்தீவாக இருந்த இந்தியா...
பூமிக்குக் கீழே உள்ள நிலத் தட்டுக்கள் நகர்வதாலும், ஒன்றுக்கு ஒன்று மோதிக் கொள்வதாலும், உரசுவதாலும்தான் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஒரு காலத்தில் இந்தியா அடங்கிய ஆசியப் பகுதி தனித் தீவு போல இருந்தது. பின்னர்தான் இது நேபாளத்துடன் வந்து இணைந்ததாக கூறுகிறார்கள்.

விஞ்ஞானிகளின் கருத்து...
அந்த இணைப்பின்போது பெரும் மோதலுடன்தான் இரு நிலப்பகுதிகளும் இணைந்தன. அன்று முதல் இன்று இரு பிராந்திய நிலத்தட்டுக்களும் உரசியபடியே உள்ளன. இதனால்தான் அப்பகுதியில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

1000 முறைக்கு மேல்...
நிலநடுக்கம் என்பது ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான முறை கூட நடைபெறும். ஆனால் அதில் மிகப் பெரிய நில அதிர்வைத்தான் நாம் உணர முடியும். எனவே நிலநடுக்கம் என்றாலே அதை உணர்ந்தால்தான் என்று இல்லை. நமக்குத் தெரியாமல் ஒரு நாளைக்கு ஆயிரணக்கான அதிர்வை இந்த பூமி சந்திக்கிறது.

அளவீடு...
நிலநடுக்கத்தின் அதிர்வு, அது ஏற்படுத்தும் பாதிப்பு ஆகியவற்றை வைத்து அதை அளவிடுகிறார்கள். நிலநடுக்கம் ஏற்படுத்தும் அதிர்வின் அடிப்படையில் தான் இது அளவிடப்படுகிறது. அதன் சக்தியை வைத்து அல்ல.

அதிக சேதாரம்...
குறிப்பாக 8.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை விட 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பல சமயம் கடும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். குறிப்பாக அந்த சின்ன அளவிலான நிலநடுக்கத்தின் அதிரவும் தாக்கமும் அதிகமாக இருக்கும்போது அதன் சேதமும் அதிகமாகவே இருக்கும்.

நில அதிர்வு...
பல நேரங்களில் 7 அல்லது 8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாமல் போயிருப்பதைக் கண்டுள்ளோம். ஆனால் இந்த அளவிலான நிலநடுக்கங்கள் மிக மிக அபாயகரமானவை. இருப்பினும் என்த அளவாக இருந்தாலும் சரி, அதன் அதிர்வை வைத்துத்தான் அதன் பாதிப்பைக் கணிக்க முடியும்.

இளகிய நிலத்தட்டுகள்...
இந்தியாவைப் பொறுத்தவரை வட இந்தியாவில்தான் அடிக்கடி பூகம்பம் வருகிறது. காரணம் அதன் நிலத் தட்டு இளகியதாக இருப்பதால். இதற்கு இந்திய நிலப்பரப்பு வேறு ஒரு பகுதியில் இருந்து பிரிந்து வந்து நேபாளப் பகுதியுடன் இணைந்ததே முக்கியக் காரணம்.

இமயமலையின் வரலாறு...
கிட்டத்தட்ட 2000 கிலோமீட்டர் கடல் பரப்பைத் தாண்டி இந்திய நிலப்பரப்பு இங்கு வந்து இணைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியப் பரப்பு வந்து இங்கு மோதியதால் ஏற்பட்டதே இமயமலை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது ஒரு காலத்தில் இமயமலையானது கடலாக இருந்தது.

மிதமான நிலநடுக்கங்கள்...
இந்தியாவைப் பொறுத்தவரை 1998ம் ஆண்டுக்குப் பின்னர் ஐந்து முறை மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் கடந்த 115 ஆண்டுகளில் 4 முறை மட்டுமே 8 அல்லது அதற்கு மேற்பட்ட ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை இந்தியா சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications