டெங்கு காய்ச்சலால் மும்பையில் 4000 பேர் பாதிப்பு – மாநகராட்சி தகவல்!
மும்பை: மும்பையில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 4000 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமானவர்களுக்கு டெங்கு தாக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில் பரேல் பகுதியில் உள்ள கே.இ.எம் மருத்துவமனை வளாகத்தில் தங்கியிருந்த 5 மருத்துவர்களுக்கு டெங்கு பாதித்துள்ளது.
கேள்விக்குறியான சுகாதார முறைகள்:
இது மருத்துவமனை வளாகத்தில் கடைபிடிக்கப்படும் சுகாதார முறைகளை கேள்விக்குறியாக்கியுள்ளது.
மருத்துவர்களுக்கு டெங்கு பாதிப்பு:
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தகவலில், கே.இ.எம் மருத்துவமனை வளாகத்தில் தங்கியிருந்த ஐந்து மருத்துவர்களுக்கு டெங்கு பாதிப்பு உள்ளது.
ஒருவர் உடல்நிலை கவலைக்கிடம்:
அவர்களில் வருஜ் துர்கே எனும் மருத்துவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், பிற நான்கு மருத்துவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கி சிகிச்சை:
மேலும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மருத்துவமனை வளாகத்தில் தங்கியிருந்த சுமார் 7 மருத்துவர்கள் டெங்கு சிகிச்சை மேற்கொண்டு டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
50 பணியாளர்கள் பாதிப்பு:
கடந்த 2 மாதங்களில் இதே மருத்துவமனை வளாகத்தில் தங்கி வரும் சுமார் 50 பணியாளர்களுக்கு டெங்கு பாதிப்பு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications