ஷாப்பிங் மால் சுவர் இடிந்து விழுந்து 4 பேர் படுகாயம்... பெங்களூருவில் பரபரப்பு
பெங்களூருவில் ஷாப்பிங் மாலில் உள்ள சுவர் இடிந்து விழுந்தது. இதில் 4 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு: மந்திரி மால் என்ற ஷாப்பிங் மாலின் பின்பக்க சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ளது மந்திரி மால். இந்த கட்டடத்தின் 3ம் தளத்தில் இயங்கி வந்த உணவகத்தின் பின்பக்க சுவர் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இன்று பிற்பகலில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் மாலுக்கு வந்திருந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஷாப்பிங் மாலின் சுவர் இடிந்து விழுந்ததால் அங்கு வந்திருந்தவர்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இந்த மாலினையொட்டி செல்லும் மெட்ரோ ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

மல்லேஸ்வரம் போலீசார், விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், தீயணைப்புத் துறையினரும் அங்கு உடனடியாகச் சென்று இடிபாடுகளை அகற்றி வருகின்றனர். சுவர் இடிந்து விழுந்தது ஏன் என்ற காரணம் இதுவரை தெரியவில்லை. இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

-
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications