கொல்கத்தாவில் பயங்கர குண்டுவெடிப்பு - 4 வயது குழந்தை பலி
கொல்கத்தா: மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் இன்று ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்பில் 4 வயது குழந்தை ஒன்று பரிதாபமாக பலியான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
வடக்கு கொல்கத்தாவின் தாலா பார்க் பகுதியில், காவல் நிலையம் அருகேயே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. 4 வயதான அக்குழந்தை, அந்த வெடிகுண்டினை பந்து என்று நினைத்து எடுத்து விளையாடிய போது குண்டு வெடித்தது.
பூட்டோ முல்லா என்ற அக்குழந்தை குண்டு வெடித்ததில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. எனினும், ஆர்.கே கர் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அக்குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்களும், கொல்கத்தா போலீசாரும் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மேலும் இரண்டு வெடிகுண்டுகளைக் கண்டறிந்தனர். அவற்றைக் கைப்பற்றி பாதுகாப்பான முறையில் செயலிழக்கச் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications