டெல்லியில் சீரழிக்கப்பட்ட 4 வயது சிறுமியின் காயங்களை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்
டெல்லி: டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 4 வயது சிறுமிக்கு ஏற்பட்ட காயங்களை பார்க்கையில் நிர்பயாவுக்கு ஏற்பட்ட காயங்கள் நினைவுக்கு வந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வடமேற்கு டெல்லியில் உள்ள கேஷவ்புரத்தில் இருக்கும் குடிசைப் பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த சிறுமி டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். சிறுமியை பலாத்காரம் செய்தவர்கள் அவரை கல்லால் அடித்ததுடன், கழுத்தை நெறித்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அவரின் மர்ம உறுப்பில் காயம் ஏற்பட்டுள்ளது.
சிறுமியின் காயங்களை பார்க்கையில் நிர்பயாவின் காயங்கள் நினைவுக்கு வந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் மேலும் கூறுகையில்,
சிறுமியின் குடல், மர்ம உறுப்பில் படுகாயம் ஏற்பட்டுள்ளதுடன், அவரது உடல் முழுவதும் கடித்து வைத்த காயமும் உள்ளது. அவருக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டி உள்ளது. அவர் குணமடைய 6 மாதங்கள் ஆகும் என்றனர்.
சிறுமியின் தந்தை கூறுகையில்,
வெள்ளிக்கிழமை மாலை வீட்டிற்கு வெளியே விளையாடிய என் மகளுக்கு உணவு மற்றும் ரூ.10 தருகிறேன் என ஒருவர் அவரை அழைத்துச் சென்றுள்ளார். காட்டுப் பகுதியில் வைத்து அவரும், அங்கு ஏற்கனவே காத்திருந்தவரும் என் மகளை பலாத்காரம் செய்துள்ளனர். இது திட்டமிட்ட செயல் ஆகும். அவர்கள் என் மகளை கொலை செய்ய முயன்றபோது அந்த வழியாக ஒரு பெண் வருவதை பார்த்துவிட்டு அவர்கள் தப்பியோடிவிட்டனர் என்றார்.
சிறுமி தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களின் விபரங்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications