கேரளாவை விடுங்க.. “தி ரியல் குஜராத் ஸ்டோரி” - 5 ஆண்டில் 41,621 பெண்களை காணவில்லை! ஷாக் ரிப்போர்ட்
காந்திநகர்: கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் இஸ்லாமியராக மதம் மாற்றப்பட்டு ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்பட்டதாக தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல்களுக்கு ஆதாரம் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போய் இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தால் ஏற்பட்ட சர்ச்சை இன்று வரை ஓயாமல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அதில், 32 ஆயிரம் பெண்கள் இஸ்லாமியராக மதம் மாற்றப்பட்டு ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இதுவரை எந்த வழக்குகளும் பதிவாகாத நிலையில் ஆதாரமற்ற தகவல்களை கொண்டு இயக்குநர் இப்படத்தை இயக்கியுள்ளார் என்று ஊடகங்கள் விமர்சித்து உள்ளன.

இந்த நிலையில், பாஜக ஆளும் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 41 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் காணாமல் போனதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறது. இதில் அதிகபட்சமாக 2019 ஆம் ஆண்டு 9,268 பெண்கள் குஜராத்தில் காணாமல் போய் இருக்கிறார்கள்.
தேசிய குற்ற ஆவணக் காப்பகமான NCRB வெளியிட்டு இருக்கும் தரவுகளின்படி, 2018 ஆம் ஆண்டில் 9,246 பேரும், 2020 ஆம் ஆண்டில் 8,290 பெண்களும், 2017 ஆம் ஆண்டில் 7,712 பேரும், 2016 ஆம் ஆண்டில் 7,105 பெண்கள் என மொத்தம் 41,621 பெண்கள் காணாமல் போய் இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.
இதில் குறிப்பாக குஜராத் மாநிலத்தின் முக்கிய நகரங்களான அகமதாபாத் மற்றும் வதோதராவில் மட்டும் 2021 ஆம் ஆண்டில் 4,722 பெண்கள் காணாமல்போய் உள்ளனர். இந்த தகவல் குஜராத் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து குஜராத் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான சுதிர் சின்ஹா தெரிவிக்கையில், "காணாமல்போன சில வழக்குகளில், சில பெண்கள் மற்றும் சிறுமிகள் வெளி மாநிலங்களுக்கு பாலியல் தொழிலுக்காக கட்டாயப்படுத்தி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
காவல்துறை காணாமல்போனதாக வழங்கப்படும் புகார்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அவற்றை கொலை வழக்கைபோல் எடுக்க வேண்டும்." என்றார். "எனது பதவி காலத்தில் கடத்தப்பட்ட பெண்களில் பலர் சட்டவிரோத மனித கடத்தல் கும்பலால் கடத்தி சென்று வெளி மாநிலங்களில் விற்கப்படுகிறார்கள். கேதா மாவட்டத்தில் நான் எஸ்பியாக இருந்தபோது உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஒருவர், ஏழை சிறுமியை தூக்கிச் சென்று தனது மாநிலத்தில் விற்று கொத்தடிமையாக்கப்பட்டார்." என்று தெரிவிக்கிறார் குஜராத் முன்னாள் கூடுதல் டிஜிபி ராஜன் பிரியதர்ஷி.
இதுகுறித்து குஜராத் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஹிரென் பங்கர் தெரிவிக்கையில், " இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் 40,000 பெண்கள் காணாமல்போனதை விட, கேரளாவில் பெண்கள் காணாமல் போனது பற்றி அதிகம் பேசுகிறார்கள்." என்றார்.
-
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்!












Click it and Unblock the Notifications