டெல்லியில் பயங்கரம்: வீடு புகுந்து பல் டாக்டரை அடித்துக் கொலை செய்த கும்பல்
டெல்லி: டெல்லியில் 40 வயது பல் டாக்டரை 15 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து அடித்துக் கொலை செய்துள்ளது.
டெல்லியில் உள்ள விகாஸ்புரி பகுதியில் மனைவி, மகனுடன் வசித்து வந்தவர் பங்கஞ் நரங்(40). பல் டாக்டர். நேற்று இரவு அவர் தனது வீட்டிற்கு வெளியே நடைபயிற்சி செய்துள்ளார். அப்போது அந்த வழியாக பைக்கில் சென்ற இருவர் அவரை உரசியுள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அங்கிருந்து ஓடிய அந்த இருவரும் சிறிது நேரத்தில் 12 பேருடன் திரும்பி வந்துள்ளனர். அந்த 15 பேரும் நரங்கின் வீட்டிற்குள் புகுந்து அவரை அடித்து நொறுக்கினர். அவரின் அலறல் சப்தம் கேட்டு அவரை காப்பாற்ற ஓடி வந்தவர்களையும் தாக்கினர்.
உடனே அப்பகுதி மக்கள் நள்ளிரவு 12 மணிக்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் வருவதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது. அந்த கும்பல் தாக்கியதில் தலையில் பலத்த காயம் அடைந்த நரங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 4 மைனர்கள் உள்பட 8 பேரை இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications