அடக் கொடுமையே... நான்காம் வகுப்பு சிறுமியைக் கற்பழித்த வெறிபிடித்த கும்பல்!

Subscribe to Oneindia Tamil

ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் 4ம் வகுப்பு படிக்கும் சிறுமியை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

 17-1445023744-17girl-gang-raped.jpg

காயில்கேரா என்ற பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்த அந்த சிறுமி, நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும், துணிகளை துவைப்பதற்காக அருகில் உள்ள ஓடைக்கு சென்றுள்ளார். அதன் பிறகு வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலையில் அந்த சிறுமியின் உடல் கிராமத்தின் அருகில் உள்ள புதருக்குள் கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

அந்த சிறுமியின் முகம் சிதைக்கப்பட்டிருந்தது. அவர் உடலில் காயங்கள் இருந்ததால், அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+