காஷ்மீரில் ராணுவ பயிற்சியின் போது திடீர் விபத்து.. 5 வீரர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு! பகீர் தகவல்
லடாக்: காஷ்மீரின் லடாக் பகுதியில் ராணுவ பயிற்சியின் போது எதிர்பாராத வகையில் விபத்து ஏற்பட்டுள்ளது. ஆற்றில் நீர் திடீரென அதிகரித்ததால் ஏற்பட்ட விபத்தில் குறைந்தது ஐந்து ராணுவ வீரர்கள் உயிரிழந்து இருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ராணுவ வீரர்கள் காஷ்மீர் உள்ளிட்ட எல்லை பகுதிகளில் எப்போதும் ஹை அலர்ட் மோடில் தான் இருப்பார்கள். அங்கு தொடர்ச்சியாக பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வருவார்கள்.

அதன்படி இன்று காஷ்மீரில் அவர்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்கள். அப்போது யாருமே எதிர்பார்க்காத வகையில் அங்கு திடீரென ஏற்பட்ட விபத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீரில் ராணுவ பயிற்சியின் போது எதிர்பாராத விதமாக விபத்து நடந்துள்ளது. ராணுவ பயிற்சியின் போது திடீரென ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டதால் டேங்க் கவிழ்ந்து விபத்து நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது காஷ்மீரின் லடாக்கில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு அருகே ஆற்றைக் கடக்கும் பயிற்சியில் ராணுவத்தின் ஈடுபட்டுள்ளனர். மந்திர் மோர் என்ற பகுதியில் டேங்கை வைத்து ஆற்றைக் கடக்கும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். டி-72 டேங்க்கை வைத்து அவர்கள் இந்த பயிற்சியைச் செய்து கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இந்த விபத்து நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications