டெல்லியில் 6 ஆப்பிரிக்கர்கள் மீது தாக்குதல் - 5 பேர் கைது
டெல்லி: டெல்லியில் 6 ஆப்பிரிக்கர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தெற்கு டெல்லியின் மெஹ்ராலி பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் வியாழக்கிழமை இரவு நடந்தது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்புதான் டெல்லியில், காங்கோ இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். அதேபோல ஹைதராபாத்தில் நைஜீரியர் ஒருவர் தாக்கப்பட்டார். இதனால் ஏற்பட்ட பரபரப்பை மேலும் அதிகமாக்கும் வகையில் 6 ஆப்பிரிக்கர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அமைந்தது.

இதையடுத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி ஆளுநர் நஜீப் ஜங் ஆகியோருடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் தற்போது 6 பேர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 பேர் சிக்கியுள்ளனர்.
ஆனால் இந்த 6 பேர் தாக்கப்பட்ட சம்பவம் நிறவெறி சம்பந்தமானதல்ல என்றும் எதேச்சையாக நடந்த சம்பவம் என்றும் டெல்லி காவல்துறை விளக்கியுள்ளது. மெஹ்ராலி பகுதியில் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்கர்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலானவர்கள் மாணவரகள்.
சம்பவத்தன்று அதாவது வியாழக்கிழமை இரவு நடந்த 3 வெவ்வேறு சம்பவங்களில் 6 ஆப்பிரிக்கர்கள் லேசான காயமடைந்தனர். அவர்களில் இருவர் உகாண்டா, தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெண்கள். இரு நைஜீரிய ஆண்களும் காயமடைந்தனர்.
கிரிக்கெட் பேட்டுகளால் இவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் தாக்குதல் திட்டமிட்டு நடக்கவில்லை என்றும் எதேச்சையாக நடந்தது என்றும் போலீஸார் கூறியுள்ளனர். சம்பந்தப்பட்ட ஆப்பிரிக்கர்கள் தங்களது இருப்பிடத்தில் சத்தமாக மியூசிக் கேட்டதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தாக்குதல் நடந்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications