Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொகுசு என்பதன் அர்த்தம் தெரிய கோவாவில் உள்ள இந்த 5 ஹோட்டல்களில் தங்கிப் பாருங்கள்!

Subscribe to Oneindia Tamil

பனாஜி: இந்தியாவில் சுற்றுலா செல்ல விரும்புவோரில் பலருக்கு பிடித்த இடம் கோவா. குறிப்பிட்ட பட்ஜெட்டிலும் கோவாவுக்கு சென்று வரலாம், இல்லை தாராளமாகவும் செலவு செய்யலாம்.

கோவா பற்றி பலரும் இணையதளங்களில் தங்களின் அனுபவங்களை தெரிவித்துள்ள நிலையில் அங்கிருக்கும் 5 நட்சத்திர ஹோட்டல்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. சுற்றுலா பயணிகளின் வசதி கருதி இந்த ஹோட்டல்கள் தங்களின் சேவையை மேம்படுத்திக் கொண்டே உள்ளன.

5 Hotels In Goa You Can Book - when on a Luxury Vacation

அடுத்த முறை நீங்கள் கோவா செல்லும்போது இந்த டாப் 5 நட்சத்திர ஹோட்டல்களில் தங்கலாம்.

சிடாட் டி கோவா

கோவாவின் சிறந்த ரகசியம் எது என்று கேட்டால் அனைவரும் ஒரு இடத்தை நோக்கியே கை காட்டுவார்கள். 40 ஏக்கரில் அமைந்துள்ள சிடாட் டி கோவா ஹோட்டலின் கட்டிடக் கலை உங்களை நிச்சயம் கவரும். போர்ச்சுக்கீஸில் உள்ள ஒரு அழகிய கிராமத்திற்கு சென்ற உணர்வு ஏற்படும்.

5 Hotels In Goa You Can Book - when on a Luxury Vacation

அந்த ஹோட்டலில் உள்ளூர் உணவு முதல் பலவகையான உணவுகள் கிடைக்கும். ஹோட்டலில் ஸ்பா மற்றும் மசாஜ் மையமும் உள்ளது. இரவு நேரங்களில் ஹோட்டலில் உள்ள பாரில் இசையை கேட்டுக் கொண்டே ஒயின் அருந்தலாம்.

தாஜ் எக்சாடிக்கா கோவா

கோவாவில் உள்ள தாஜ் எக்சாடிக்கா ஹோட்டல் 56 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. சொகுசு என்பதன் அர்த்தம் தெரிய இங்கு தங்கிப் பார்க்க வேண்டும் இந்த ஹோட்டலில் இந்திய உணவுகள் மற்றும் சர்வதேச உணவு வகைகள் கிடைக்கும். ஹோட்டலுக்கு அருகே பெனாலிம் கடற்கரை உள்ளது.

5 Hotels In Goa You Can Book - when on a Luxury Vacation

நோவோடெல் கோவா ஷ்ரெம் ஹோட்டல்

ட்ரிப்அட்வைசர்ஸ்' பயணிகள் நோவோடெல் ஹோட்டலுக்கு 5க்கு 4.5 மதிப்பெண்கள் அளித்துள்ளனர். ஹோட்டலில் சுவையான உணவு வகைகள், யோகா, தியானம் என பல வசதிகள் உள்ளன. தங்கிப் பார்த்தால் தான் அது தெரியும்.

5 Hotels In Goa You Can Book - when on a Luxury Vacation

கிராண்ட் ஹயாத் கோவா

ஓய்வு எடுக்க மற்றும் தொழில் ரீதியாக செல்வோருக்கு ஏற்ற இடம் கிராண்ட் ஹயாத் கோவா. கடற்கரையோரம் அமைந்துள்ள இந்த ஹோட்டலுக்கு வருவோருக்கு திரும்பிச் செல்ல மனம் வராது.

5 Hotels In Goa You Can Book - when on a Luxury Vacation

ஹாலிடே இன் ரிசார்ட் கோவா

சொகுசாக மன அமைதியுடன் தங்க ஏற்ற இடம் ஹாலிடே இன் ரிசார்ட் கோவா. இந்த ஹோட்டலில் தங்கினால் கோவாவின் வித்தியாசமான பக்கத்தை தெரிந்து கொள்ள
முடியும். அழகிய பனை மரங்கள், கடற்கரைகள் என அசத்தும் கோவாவை பார்க்கலாம்.

5 Hotels In Goa You Can Book - when on a Luxury Vacation

குழந்தைகளுடன் வந்தால் அவர்கள் விளையாடி மகிழ தனியாக இடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+