‛சிரித்த முகம்’.. அயோத்தி ராமர் கோவிலின் 5 வயது பால ராமர் சிலை உருவானது எப்படி? 5 சிறப்பு இதுதான்
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. கோவில் கருவறையில் 5 வயது பால பருவ சிரித்த முகம் கொண்ட ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அந்த சிலை குறித்த 5 முக்கிய விஷயங்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. 2020 ஆகஸ்ட் மாதம் ராமர் கோவில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நிலையில் முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ளது. பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.

நாகரா கட்டடக்கலை நுட்பத்தில் சிற்ப தூண்களுடன் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இன்று ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மதியம் 12.15 மணி முதல் 12.45 மணிக்குள் நடந்த கும்பாபிஷேகத்தில் பிரதமர் மோடி பங்கேற்று சடங்குகள் செய்தார்.
அயோத்தி ராமர் கோவில் கருவறையில் வைக்க மொத்தம் 3 சிலைகள் செதுக்கப்பட்டு இருந்தன. இதில் 5 வயது குழந்தை வடிவ ராமர் சிலை கோவில் கருவறையில் நிறுவ தேர்வு செய்யப்பட்டது. இந்த சிலையானது சிரித்த முகத்துடன் சாந்தமாக இருக்கும். கடந்த 18ம் தேதி கோவிலில் ராமர் சிலை நிறுவப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்றைய தினம் கோவில் சிலைக்கு பிரான் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த சிலை தான் ராம் லல்லா என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் தான் அயோத்தி ராமர் கோவில் கருவறையில் உள்ள 5 வயது குழந்தை பருவ ராமர் சிலை குறித்த 10 முக்கிய விஷயங்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:
* இந்த சிலையானது 51 இன்ச் உயரம் 200 கிலோ எடை கொண்டது. சிலையை கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கி உள்ளார்.
* இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ள கல்லின் பெயர் கிருஷ்ண ஷிலா. இது கர்நாடகாவின் மைசூரு மாவட்டத்தில் உள்ள எச்டி கோட் தாலுகாவில் உள்ள புஜ்ஜேகவுடனபுரா கிராமத்தில் உள்ள பாறையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு பல டன் எடை கொண்ட ஒற்றை கல்லில் இருந்து 200 கிலோ எடையுடன் கலைநுட்பத்துடன் சிலை செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு தொடர்ந்து தண்ணீர், பால் அபிேஷகம் செய்தாலும் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

* ராமர் விஷ்ணுவின் அவதாரமாக உள்ளார். இந்நிலையில் தான் ராமர் சிலையை சுற்றி விஷ்ணுவின் 10 அவதார வடிவங்கள் சிற்பமாக இடம்பெற்றுள்ளது. மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம்,பரசுராமர், ராமர், கண்ணன், புத்தர், கல்கி ஆகிய தசாவதாரங்கள் சிற்பங்களாக உள்ளன. அதுமட்டுமின்றி பிரம்மனும், ருத்திரனும் இரண்டு பக்கமும் சிற்பங்களாக செதுக்கப்படுள்ளன. ஒரு பக்கம் அனுமனும் மற்றொரு பக்கம் கருடனும் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.
* மேலும் ராமர் சிலையை சுற்றிய அலங்காரத்தில் சங்கு, சக்கரம், தாமரை, கதை, பிரணவம், சுவத்திகம், போன்ற சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. சிலையின் கீழ் பகுதியில் நவகிரங்களான சூரியன், புதன், சுக்கிரன், குரு, ராகு கேது, வெள்ளி, சந்திரன், செவ்வாய், சனி உள்ளிட்டவற்றின் சிற்பங்கள் உள்ளன.
* மேலும் இந்த சிலையின் மீது ஒவ்வொரு ஆண்டின் ராமநவமி தினத்தில் சூரியஒளி விழுவது போன்று வடிமைக்கப்பட்டுள்ளது. ராமநவமி தினத்தில் மதியம் 12 மணிக்கு சூரிய ஒளி நேரடியாக ராமரின் நெற்றியில் விழும்படி கோவில் கருவறை வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications