இது என்ன வயிறா இல்லை காயலான் கடையா?
மத்தியப் பிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவரின் வயிற்றில் கிடந்த 5 கிலோ இரும்பு பொருள்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து நீக்கினர்.
Recommended Video

போபால்: மத்தியப் பிரதேசத்தில் மாநிலத்தில் ரகசியமாக இரும்பு பொருள்களை சாப்பிட்ட இளைஞரின் வயிற்றிலிருந்து 5 கிலோ எடை கொண்ட இரும்பு பொருள்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.
சாத்னா மாவட்டம், சோஹாவாலை சேர்ந்தவர் முகமது மக்சூட் (32). இவருக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 18-ஆம் தேதி சஞ்சய் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அந்த இளைஞரின் உடலை மருத்துவர்கள் ஆய்வு செய்து பல்வேறு பரிசோதனைகளை செய்தனர்.

இளைஞருக்கு எக்ஸ்ரே எடுத்தனர்
அந்த இளைஞருக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவரது வயிற்றில ஏதோ சில பொருள்கள் இருப்பது போன்று கண்டுபிடிக்கப்பட்டது.

6 மருத்துவர்கள் சிகிச்சை
இளைஞர் முகமதுவுக்கு 6 மருத்துவர்கள் அடங்கிய குழு அறுவை சிகிச்சை செய்தது. அவரது வயிற்றிலிருந்து 10-12 ஷேவிங் பிளேடுகள், 4 பெரிய ஊசிகள், செயின், 263 நாணயங்கள், கண்ணாடி துண்டுகளை மருத்துவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அகற்றினர்.

அரிதான அறுவை சிகிச்சை
இதுகுறித்து அந்த இளைஞருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் பிரியங்கா சர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில் இளைஞருக்கு அறுவை சிகிச்சை செய்து 5 கிலோ இரும்பு பொருள்கள் அகற்றப்பட்டன. தற்போது அந்த இளைஞர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

ரகசியமாக சாப்பிட்டார்
அந்த இளைஞருக்கு மனநிலை சரியில்லாததால் பெற்றோருக்கு தெரியாமல் இரும்பு பொருள்களை வாயில் போட்டுக் கொண்டுள்ளார். இந்த மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கு முன்னர் இளைருக்கு ரேவா மாவட்டத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றார் மருத்துவர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications