Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குழந்தை வரத்திற்காக 2 பாலியல் தொழிலாளிகள் நரபலி! மாநிலத்தையே அதிர வைத்த தம்பதி!

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்திய பிரதேசத்தில் 2 பாலியல் தொழிலாளிகளை நரபலி கொடுத்த கணவன், மனைவி மற்றும் அவர்களுக்கு உடந்தையாக மூவர் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் மொரேனா பகுதியை சேர்ந்தவர் பண்டு பத்தோரியா. அதே பகுதியை இருந்த மம்தா என்ற பெண்ணை இவர் 17 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி இத்தனை வருடம் கழித்தும் இவர்களுக்கு குழந்தை இல்லை.

மருத்துவ ரீதியாக பல சிகிச்சைகளை பெற்றும் குழந்தை இல்லாத காரணத்தால் பல்வேறு சாமியார்களை சந்தித்து குழந்தை பெற்றுக்கொள்ள பல்வேறு பூஜைகளை நடத்தி வந்துள்ளனர். ஆனால் பல பூஜைகள் நடத்தியும் இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை.

நரபலி

நரபலி

இதையடுத்து கிர்வார் யாதவ் என்ற சாமியாரை சந்தித்த பண்டு - மம்தா சிறப்பு பூஜைகளை நடத்தி உள்ளனர். கடைசியாக மனித உயிர் ஒன்றை நரபலி கொடுத்தால்தான் குழந்தை பிறக்கும் என்று அந்த சாமியார் கூறியுள்ளார். இதையடுத்து மம்தா தனது தங்கை மீரா மற்றும் தங்கையின் காதலன் நீரஜ் ஆகியோரிடம் இந்த நரபலி விஷயம் குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து நீரஜ்தான் பாலியல் தொழிலாளி ஒருவரை நரபலி கொடுக்கலாம் என்று ஐடியா கொடுத்துள்ளார்.

ஐடியா

ஐடியா

பாலியல் தொழிலாளிகள் காணாமல் போனால் பெரிதாக யாரும் புகார் தர மாட்டார்கள், யாரும் சந்தேகப்பட மாட்டார்கள் என்று நீரஜ் பாலிவுட் சினிமா காட்சி ஒன்றை கூறி ஐடியா கொடுத்துள்ளார். பாலிவுட் சினிமா காட்சி ஒன்றை காட்டி, படத்தில் வந்தது போல நாமும் பாலியல் தொழிலாளியை நரபலி கொடுக்கலாம் என்று கூறியுள்ளார். இதையடுத்துதான் அக்டோபர் 13ம் தேதி இவர்கள் சராய் சோழா பகுதியில் பாலியல் தொழிலாளி ஒருவரை காசு கொடுத்து அழைத்து வந்து பின்னர் நரபலி செய்துள்ளனர்.

நரபலி

நரபலி

ஆனால் இந்த நரபலிக்கு பின் அந்த சாமியார்.. பாலியல் தொழிலாளியை சரியாக நரபலி கொடுக்கவில்லை. மரணம் சரியாக நிகழவில்லை. மீண்டும் நரபலி கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து மீண்டும் இன்னொரு பாலியல் தொழிலாளியை கடந்த அக்டோபர் 20ம் தேதி இவர்கள் நரபலி கொடுத்துள்ளனர். இதில் இரண்டாவது பெண்ணின் உடல் குவாலியரில் உள்ள ஐஐஐடிஎம் கல்லூரி வளாகம் அருகே கண்டுபிடிக்கப்பட்டது.

 உடல் விழுந்தது

உடல் விழுந்தது

இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பைக்கில் பிணத்தோடு வந்த பண்டு - மம்தா தம்பதியை கண்டுபிடித்து கைது செய்தனர். இரண்டாவது பெண்ணின் உடலை புதைக்க செல்லும் போது குவாலியரில் உள்ள ஐஐஐடிஎம் கல்லூரி வளாகம் முன் பெண்ணின் உடல் விழுந்துள்ளது. பைக்கில் செல்லும் முன் கல்லூரி வளாகம் முன் உடல் விழுந்துள்ளது. அப்போதுதான் இவர்கள் முகம் மற்றும் பைக் நம்பர் சிசிடிவியில் பதிவாகி உள்ளது.

நரபலி

நரபலி

இவர்களிடம் நடத்திய விசாரணையில் நரபலி குறித்த உண்மையை தெரிவித்துள்ளனர். இன்னொரு பாலியல் தொழிலாளியை நரபலி கொடுத்ததையும் இவர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து பண்டு - மம்தா, மம்தாவின் தங்கை மீரா மற்றும் தங்கையின் காதலன் நீரஜ், சாமியார் கிர்வார் யாதவ் ஆகியோர் மீது கொலை வழக்கு பதியப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+