மேகாலயா சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறு.. நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய 5 பாயிண்ட்
வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் நடைபெறும் சட்டசபைத் தேர்தல் குறித்த 5 பாயிண்டுகளை பார்ப்போம்.
ஷில்லாங்: இன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தல் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவிலும் சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மேகாலயா சட்டசபைத் தேர்தல் குறித்த 5 பாயிண்டுகளை பார்ப்போம்.
வட கிழக்கு மாநிலமான திரிபுராவில் கடந்த சில வாரங்களுக்கு முன் சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் மேகாலயா மற்றும் நாகாலாந்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
பொதுவாகவே பெரிய மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களைபோல் வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெறும் தேர்தல்கள் உற்று நோக்கப்படுவது கிடையாது.

தள்ளிவைப்பு
மேகாலயா மாநிலத்தில் 60 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், சோகியாங் தொகுதி யுடிபி கட்சியின் வேட்பாளர் எச்டிஆர் லைங்தோ காலமானதால் அந்த தொகுதிக்கு தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த மாநிலத்தில் 59 தொகுதிளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.

பன்முனைப் போட்டி
மேகாலயாவில் காங்கிரஸ், பாஜக, கான்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சி, திரிணாமூல் காங்கிரஸ் இடையே பன்முனைப் போட்டி நடக்கிறது. முன்னாள் முதலமைச்சர் முகுல் சங்மா மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கட்சி தாவிய காரணத்தால் மேகாலயாவில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக உள்ளது.

2018 தேர்தல்
காங்கிரஸ் கட்சி கடந்த முறை இந்த மாநிலத்தில் 21 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியானது. ஆனால், இம்முறை அதன் வாக்குவங்கி குறைந்துள்ளது. மேகாலயாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக 2 தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஆனால், தேசிய மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆளும் கூட்டணியில் இடம்பிடித்தது.

பாஜக தனித்து போட்டி
ஆனால், தற்போது இரு கட்சிகள் இடையே மோதல் ஏற்பட்டதால் தனியாக போட்டியிடும் பாஜக 60 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிடுகிறது. தேசிய மக்கள் கட்சியை பொறுத்தவரை மேகாலயா மட்டுமின்றி அனைத்து வட கிழக்கு மாநிலங்களிலும் அதிகாரத்தை கைப்பற்ற திட்டமிட்டு காய்களை நகர்த்தியது.

தேசிய மக்கள் கட்சி
இதுவே பாஜகவுடன் அந்த கட்சிக்கு மோதல் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தது. மணிப்பூரில் சங்மாவின் என்பிபி போட்டியிட்டு அதிக வாக்குகளை பெற்று வாக்கு வங்கியை உயர்த்தியது. அதேபோல் அருணாச்சல பிரதேசத்திலும் தேசிய மக்கள் கட்சிக்கு வாக்குவங்கி உள்ளது. நாகாலாந்திலும் அடுத்ததாக அந்த கட்சி கால்பதிக்க உள்ளது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications