பதுங்கி பாய்ந்த பயங்கரவாதிகள்.. சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர்! ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் பதுங்கியிருந்த 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படையினர் கூறியுள்ளனர். இவர்கள் லக்ஷர் இ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தற்போது பனி காலம் தொடங்கியுள்ளது. இந்த நேரத்தில் வழக்கமாக பயங்கரவாதிகளின் ஊடுருவல்கள் அதிகரிக்கும். எனவே முன்னெச்சரிக்கையாக சந்தேகத்திற்கு இடமான பகுதிகளில் காவல்துறையினருடன் சேர்ந்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது குல்காம் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினர் மீது தாக்குதலை நடத்தினர்.

உடனடியாக சுதாரித்துக்கொண்ட வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். நீண்ட நேரம் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இதனை ஜம்மு காஷ்மீர் காவல்துறை உறுதி செய்திருக்கிறது. அதேபோல தாக்குதல் நடந்த பகுதியிலிருந்து வேறு யாரேனும் தப்பி சென்றிருக்கிறார்களா? என்பது குறித்தும் தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் ஜம்மு காஷ்மீரில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக ட்ரோன்கள் மூலம் போதை பொருட்கள், ஆயுதங்கள் இந்திய எல்லை பகுதியில் கடத்தப்பட்டன. இந்த முயற்சியை வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகள் அதிகரித்துள்ளன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications