5 வயது சிறுமியை கடத்தி கொலை செய்த 16 வயது சிறுவன்.. சினிமா பார்த்து செய்ததாக வாக்குமூலம்

ஹரியானாவில் 5 வயது சிறுமியை 16 வயது சிறுவன் ஒருவன் கடத்தி கொலை செய்து இருக்கிறான்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    5 வயது சிறுமியை கடத்தி கொலை செய்த 16 வயது சிறுவன்.. சினிமா பார்த்து செய்ததாக வாக்குமூலம்- வீடியோ

    சண்டிகர்: ஹரியானாவில் 5 வயது சிறுமியை 16 வயது சிறுவன் ஒருவன் கடத்தி கொலை செய்து இருக்கிறான். மேலும் சினிமாவை பார்த்து தான் இந்த கொலையை செய்ததாக வாக்குமூலம அளித்து இருக்கின்றான்.

    காணாமல் போன அந்த 5 வயது சிறுமியை அதே தெருவில் இருக்கும் சிறுவனே கொலை செய்து இருப்பது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அவன் போலீஸ் வாக்குமூலத்தில் மிகவும் அதிர்ச்சியளிக்க கூடிய விஷயங்கள் பலவற்றை சொல்லி இருக்கிறான்.

    அதேபோல் அவன் தனது வாக்குமூலத்தில் ஏன் அந்த அந்த சிறுமியை கொலை செய்தேன் என்பதற்கும் காரணம் கூறியிருக்கிறான்.

    சிறுமி கடத்தல்

    சிறுமி கடத்தல்

    ஹரியானாவின் சண்டிகரில் உள்ள 5 வயது சிறுமி ஒருவர் நேற்று கடத்தப்பட்டார். அந்த சிறுமியை பக்கத்து வீட்டில் இருந்த 16 வயது சிறுவன் ஒருவன் கடத்தி இருக்கின்றான். பக்கத்து வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டு இருந்த போது அந்த சிறுவன் சிறுமியிடம் போய் விளையாட்டாக பேசி டிவி பார்க்க அழைத்து இருக்கிறான். ஆனால் வீட்டிற்குள் வந்த பின் கதவை மூடிவிட்டு, அந்த சிறுமியை கட்டிப் போட்டு இருக்கிறான்.

    பணம் கேட்டு மிரட்டல்

    பணம் கேட்டு மிரட்டல்

    அதன் பின் அந்த குழந்தையை கடத்தி சரியாக 2 மணி நேரம் கழித்து அந்த சிறுமியின் வீட்டிற்கு போன் செய்து இருக்கின்றான். போனில் அந்த சிறுமியின் பெற்றோரிடம் 20 லட்சம் பணம் கேட்டுள்ளான். இதற்காக குரலை மாற்றி வேறு பேசி இருக்கிறான். பயந்து போன அந்த சிறுமியின் பெற்றோர் போலீசிடம் சென்றனர்.

    போலீசிடம் பிடிபட்டான்

    போலீசிடம் பிடிபட்டான்

    இந்த நிலையில் போலீஸ் அந்த போன் வந்த இடத்தை டிரெஸ் செய்தது. அதன்மூலம் அந்த தெருவில் இருந்துதான் கால் வந்து இருக்கின்றது என்பதை போலீஸ் கண்டுபிடித்தது. பின் ஒவ்வொரு வீடாக தேடியதில் அந்த சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார். ஆனால் அந்த சிறுமியை ஏற்கனவே அந்த சிறுவன் கொலை செய்து தண்ணீர் தொட்டியில் போட்டு வைத்து இருக்கின்றான். அந்த சிறுவன் குடும்பம் வாடகைக்கு இருக்கும் வீடு இந்த சிறுமியின் தந்தைக்கு சொந்தமான வீடு என்பது குறிப்பிடத்தக்கது.

    போலீசில் வாக்குமூலம்

    போலீசில் வாக்குமூலம்

    இந்த நிலையில் ஏன் இந்த செயலை செய்தேன் என அந்த சிறுவன் போலீசில் வாக்குமூலம் அளித்து இருக்கிறான். அதில் "நான் சினிமா பார்த்துதான் இப்படி செய்தேன். அதில் ஆவது போல் குழந்தையை கடத்தி எளிதாக பணக்காரன் ஆகலாம் என்று நினைத்தேன். அந்த சிறுமி சத்தம் போட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் தண்ணீர் தொட்டியில் முக்கி கொலை செய்தேன்'' என்று பேசி இருக்கின்றான்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+