5 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை: 35 வயது வேன் டிரைவர் கைது
டெல்லி: பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வேன் டிரைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் தலைநகர் டெல்லியில் நடந்துள்ளது.
தெற்கு டெல்லியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் நர்சரிக்கு முந்தைய வகுப்பு படிக்கும், 5வயது சிறுமி பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். டெல்லியிலுள்ள கல்காஜி பகுதியில் உள்ள வீட்டில் இருந்து கிரேட்டர் கைலாஸ் பகுதியிலுள்ள பள்ளிக்கு தினமும் தனது பெற்றோர் ஏற்பாடு செய்த வாடகை வேனில் சிறுமி செல்வது வழக்கம்.இவ்வாறு செல்லும்போது சிறுமி தனியாக வேனில் இருப்பதை சாதகமாக்கி கொண்டு, வேன் டிரைவர் விபின்குமார் (35) தினமும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த இரு வாரங்களால் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பள்ளிக்கும் செல்லவில்லையாம். பள்ளிக்கு இனிமேல் போகமாட்டேன் என்றும் சிறுமி கூறியுள்ளார். இதற்கான காரணத்தை பெற்றோர் வலியுறுத்தி கேட்டபோதுதான், வேன் டிரைவரின் கொடூர முகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்நிலையில்தான் சம்பவம் குறித்து பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் வேன் டிரைவர் விபின் குமார் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 2 வாரங்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications