11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: கூலித் தொழிலாளிக்கு 5 ஆண்டுச் சிறை
சிக்மகளூர்: 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.8 ஆயிரம் அபராதமும் விதித்து சிக்மகளூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
சிக்மகளூர் அருகே உள்ள கல்தொட்டி பகுதியை சேர்ந்தவ கூலித் தொழிலாளியான 25 வயது ராஜூ, அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமியை கடந்தாண்டு ஜனவரி மாதம் பாலியல் பலாத்காரம் செய்தார். இதுபற்றி வீட்டில் யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதுடன், சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று அங்கும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர், சிறுமி இதுபற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அவரை சிக்மகளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இது குறித்து சிக்மகளூர் கிராமப்புற போலீசில் அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் ராஜூவை கைது செய்து சிக்மகளூர் ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு முதல் வகுப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கோமலா, குற்றம் சாட்டப்பட்ட ராஜூவுக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.8 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். அபராத தொகையில் ரூ.5 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு வழங்கும்படியும் மாஜிஸ்திரேட்டு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications