ராஜஸ்தானில் மாயாவதிக்கு பேரதிர்ச்சி.. 6 பிஎஸ்பி எம்எல்ஏக்கள் காங்கிரஸுக்கு தாவல்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மாயாவதியின் கட்சியை சேர்ந்த 6 பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் திங்கள்கிழமை இரவு காங்கிரஸ் கட்சிக்கு தாவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 100 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதன் முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். இந்த நிலையில் மாயாவதியின் கட்சி 6 இடங்களில் வெற்றி பெற்றது.

சுயேச்சைகளாக வெற்றி 12 எம்எல்ஏக்களும் காங்கிரஸுக்கு ஆதரவு அளிக்க போவதாக கடந்த ஆண்டு தெரிவித்தனர். இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற 6 எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சிக்கு நேற்று இரவு தாவினர்.
உதைய்பூர்வதி தொகுதியை சேர்ந்த எம்எல்ஏ ராஜேந்திர குட், நத்பய் தொகுதி எம்எல்ஏ ஜோகேந்திர சிங் அவானா, லக்கான் சிங் மீனா (கரோலி), சந்தீப் யாதவ் (திஜாரா) மற்றும் தீப்சந்த் கேரியா (கிஷான்கர்பாஸ்) ஆகிய 6 பேரும் காங்கிரஸில் இணைந்தனர்.
இவர்கள் 6 பேரும் முதல்வர் அசோக் கெலாட்டுடன் தொடர்பில் இருந்து வந்தனர். இந்த நிலையில் இன்று சட்டசபை சபாநாயகர் சிபி ஜோஷியை சந்தித்து தாங்கள் 6 பேரும் காங்கிரஸில் இணைந்துள்ளது குறித்த கடிதத்தை அளித்தனர்.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி











Click it and Unblock the Notifications