பாத்ரூமில் கொடுமை.. போனில் ஆபாச படங்கள்.. 6 வயது சிறுமியை அடித்தே கொன்ற 3 சிறுவர்கள்.. அதிர்ச்சி
ஆபாச படம் பார்க்க மறுத்த 6 வயது சிறுமி கொலை செய்யப்பட்டார்
கவுகாத்தி: 6 வயது சிறுமியை அடித்து கொன்றுள்ளார்கள்.. இந்த கொடூர கொலையை செய்தவர்கள் 3 சிறுவர்கள் என்பது அதைவிட ஷாக் செய்தி.
வடமாநிலங்களில் நாளுக்கு நாள் வன்முறை சம்பவங்கள் அதிகமாகி கொண்டே போகின்றன.. குறிப்பாக பெண்கள் மீதான தாக்குதல்களும், வன்முறை சம்பவங்களும் அதிகரித்து கொண்டே வருகின்றன.
இதில் பெருமளவு பாதிக்கப்படுவது பெண் குழந்தைகள்.. பெண் குழந்தைகளின் பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகி விட்டது.. பலாத்காரங்களும், அதையொட்டிய மரணங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன.. இதை மாநில எதிர்க்கட்சிகளும் சுட்டிக்காட்டி ஆளும் கட்சிகளை கண்டித்து வருகின்றன.. இப்படிப்பட்ட சூழலில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.

3 சிறுவர்கள்
அசாம் மாநிலம், நாகோன் மாவட்டத்தின் நிஜோரி என்ற பகுதியை சேர்ந்தவள் அந்த 6 வயது சிறுமி.. அந்த பகுதியை சேர்ந்த 8 மற்றும் 11 வயது உடைய 2 சிறுவர்கள் என 3 பேர் இந்த சிறுமிக்கு ஏற்கனவே நன்கு அறிமுகம்.. அந்த 3 சிறுவர்களிடமும் செல்போன்கள் இருந்துள்ளன.. அந்த செல்போனில் ஆபாச படங்களை வைத்திருந்துள்ளனர்.. அதுமட்டுமல்ல, தங்களிடம் போனில் ஆபாச படத்தை பார்க்க சிறுமியை 3 சிறுவர்களும் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

கோபம்
இதற்கு சிறுமி மறுப்பு தெரிவிக்கவும், 3 சிறுவர்களுக்கும் கோபம் வந்துள்ளது.. அதனால் ஆபாச படத்தை பார்க்கும்படி கட்டாயப்படுத்தி உள்ளனர்.. அப்போதும் சிறுமி மறுக்கவும், ஆத்திரமடைந்த அந்த சிறுவர்கள் சிறுமியை தரதரவென இழுத்து சென்றுள்ளனர்.. பக்கத்தில் இருக்கும், கல் உடைக்கும் தொழிற்சாலையின் பாத்ரூமில் சிறுமியை அடித்தே கொன்று விட்டனர்.

பேக்டரி
அதற்கு பிறகு எதுவுமே நடக்காததுபோல, சிறுமியின் வீட்டிற்கு சென்று, பக்கத்து பேக்டரியின் பாத்ரூமில் அவள் மயங்கி கிடப்பதாக சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடிச்சென்றுவிட்டனர்.. இதை கேள்விப்பட்டு குடும்பத்தினர் பதறிகொண்டு பார்த்தபோதுதான், சிறுமி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.. இதையடுத்து போலீசாருக்கும் தகவல் தெரிந்து, அவர்களும் விசாரணையை துவக்கி உள்ளனர்..

விசாரணை
தகவல் சொன்ன 3 சிறுவர்களையும் அழைத்து விசாரித்தனர்.. எல்லா உண்மையும் தெரியவந்ததையடுத்து போலீசாரே மிரண்டுபோய்விட்டனர்.. இப்போது அவர்கள் 3 பேருமே கைதாகி உள்ளனர்.. இதில் ஒருசிறுவனின் தந்தை விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லையாம்.. அதனால், அந்த சிறுவனின் தந்தையும் கைது செய்யப்பட்டார். சிறுவர்கள் 3 பேரும் சேர்ந்து ஆபாச படம் பார்க்க மிரட்டியதும், இதற்காக ஒரு சிறுமியை கொன்ற விவகாரமும், அறிந்து அந்த மாநில மக்கள் அப்படியே அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications