ஜம்மு காஷ்மீர்: 7 சட்டசபை தேர்தல்களை விட அதிகம்.. முதல் கட்டத்தில் 61.11% வாக்குகள் பதிவு!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் முதல் கட்டத்தில் 61.11% வாக்குகள் பதிவானதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் கிஷ்ட்வாரில் அதிகபட்சமாக 80.14%; குறைந்தபட்சமாக புல்வாமாவில் 46.65% வாக்குகள் பதிவானதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு நேற்று 24 தொகுதிகளில் நடைபெற்றது. 7 மாவட்டங்களின் 24 தொகுதிகளில் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடந்தது.

ஜம்மு காஷ்மீர் முதல் கட்ட தேர்தலில் காலை முதலே வாக்காளர்கள் மிக நீண்ட வரிசைகளில் நின்று வாக்களித்தனர். 2014-ம் ஆண்டுக்குப் பிறகு, 10 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற முதல் தேர்தல் என்பதால் வாக்காளர்கள் வாக்களிக்க மிகவும் ஆர்வம் காட்டினர். முதல் கட்ட தேர்தலில் 219 பேர் போட்டியிட்டனர். சுமார் 23 லட்சம் பேர் வாக்காளர்கள்.
ஜம்மு காஷ்மீர் முதல் கட்ட தேர்தல் வாக்குப் பதிவு (இரவு 11.30 மணி நிலவரம்-
மாவட்டங்கள் வாரியாக...
- அனந்தாக் 57.84%
- தோடா 71.34%
- கிஷ்ட்வார் 80.14%
- குல்காம் 62.46%
- புல்வாமா 46.65%
- ரம்பான் 70.55%

கிஷ்ட்வார் மாவட்டத்தில்தான் மிக அதிகபட்சமாக 80.14% வாக்குகளும் குறைந்தபட்சமாக புல்வாமாவில் 46.65% வாக்குகளும் பதிவாகி உள்ளன.
ஷோபியான் 2 55.96.
ஜம்மு காஷ்மீரில் 2-வது கட்ட தேர்தல் செப்டம்பர் 25-ந் தேதியும் 3-வது கட்ட தேர்தல் அக்டோபர் 1-ந் தேதியும் நடைபெறும். அக்டோபர் 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
ஜம்மு காஷ்மீர் மாநிலமானது 2019-ம் ஆண்டு 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், லடாக் யூனியன் பிரதேசம் என பிரிக்கப்பட்டது. இதில் ஜம்மு காஷ்மீருக்கு மட்டும் சட்டசபை உண்டு. லடாக் யூனியன் பிரதேசத்துக்கு சட்டசபை இல்லை.
ஜம்மு காஷ்மீர் ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்த போது சட்டசபையின் பதவிக் காலம் 6 ஆண்டுகள். ஆனால் 2019-ம் ஆண்டு யூனியன் பிரதேசமாக்கப்பட்ட போது சட்டசபையின் பதவிக் காலம் 5 ஆண்டுகள்.
2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யபட்டது. மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்குப் பின்னர் ஜம்மு காஷ்மீரில் அரசியல் நடவடிக்கைகள் முடங்கி இருந்தன. உச்சநீதிமன்றத்தின் உத்தரவில் தற்போது ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடைபெற்று வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications